சர்வதேச கால்பந்தாட்டத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து விளையாடுவதற்கிறந்த தடைச்சட்டம் நீக்கப்பட்டுள்ளது.கடந்தவாரம் சர்வதேச கால்பந்தாட்ட சபையின் எட்டுஅங்கத்தவர்களைக் கொண்ட குழுவால், பெண்கள் ஹிஜாப் அணிந்து கால்பந்தாட்டம்
விளையாடுவதற்கான ஆரம்ப அங்கீகாரம் வழங்கப்பட்டது.கால்பந்து விளையாட்டு வீராங்கனைகளுக்கு டச்சு வடிவமைப்பான வெல்க்ரோ ஹிஜாப் அணியவே அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கால்பந்தாட்ட சபையின் உறுப்பினர்களில் ஒருவரான ஜோர்த்தானின் இளவரசரான அலிபின் அல்-ஹுசைன் தெரிவித்துள்ளார். ஹிஜாப்புக்கான ஆரம்ப அங்கீகாரமானது முஸ்லிம் கால்பந்தாட்ட வீராங்கனைகளுக்கு
போட்டிகளில் பங்குபற்றுவதற்கான சிறந்தவாய்ப்பாக விளங்குகின்றது.
கால்பந்தாட்டத்தில் ஹிஜாப்புக்கான இறுதிமுடிவு எதிர்வரும் ஜுலைமாதத்தில் சர்வதேச கால்பந்தாட்ட சபையினால் வழங்கப்படவுள்ளது.
கால்பந்ததாட்டத்தில் பெண்கள் ஹிஜாப் அணிந்து விளையாடுவதற்கான
தடைச்சட்டம் 2007ஆம் ஆண்டு பீபா அமைப்பினால் அமுலாக்கப்பட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது. 2012ஆம் ஆண்டு லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டியில் ஹிஜாப் மற்றும் ஏனைய மதமுகமறைப்பகங்களையும் தடைசெய்யப்யப் போவதாக பீபா அமைப்பு 2010ஆம் ஆண்டு அறிவித்தது.இதனால் கடந்தவருடம்,2012 லண்டன் ஒலிம்பிக் கால்பந்தாட்டத்துக்கு தகுதிகாண் சுற்றிறுப்போட்டியின் இரண்டாம் சுற்றில் ஈரானியவீராங்கனைகள் ஜோர்த்தானுடான போட்டியில் விளையாடவில்லை.கால்பந்தாட்டத்தில் ஹிஜாப் தடையை நீக்குமாறு ஐக்கியநாடுகள்சபை,பீபா அமைப்புக்கு மார்ச் 1ஆம் திகதி அழைப்புவிடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
0 Comments