உஸ்பெகிஸ்தானில் முஸ்லிம்களின் மீதான கண்கானிப்பு அதிகரித்து வருவதைத் தொடாந்து அங்கு மதரீதியான உடைகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.அதாவதுஹிஜாப் மற்றும் புர்கா போன்ற இஸ்லாமிய ஆடைகளை உஸ்பெகிஸ்தான் தலைநகரான தஸ்கென்ட்டில் உள்ள பல கடைகளில் விற்பனை செய்வதற்கு
அந்நாட்டு அதிகாரிகள் தடைவிதித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.உஸ்பெகிஸ்தானில் இஸ்லாமிய உடைகளை குறிப்பிட்ட அளவிலேயே விற்பனைசெய்யமுடிவதாக இஸ்லாமிய ஆடைகளை இறக்குமதிசெய்யும் பெண்வியாபாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை உஸ்பெகிஸ்தானின் பொதுஇடங்களில் மதரீதியான ஆடைகளை அணிந்துசெல்பவர்களுக்கு தண்டம் அறவிடும் மற்றும் குறுங்கால சிறைவாசத் தண்டனைச் சட்டம் 1998ஆம்ஆண்டு கொண்டுவரப்பட்டது.இச்சட்டம் கொண்டுவரப்பட்டதன் பின்னர் பொது இடமொன்றில் ஹிஜாப் அணிந்து சென்றதற்காக முதல்தடைவையாக பெண்ஒருவருக்கு 155அமெரிக்க டொலர்கள் தண்டம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உஸ்பெகிஸ்தானின் நெமன்கன் பகுதியில் உள்ள 181பள்ளிவாசல்களில்
அரசாங்கத்தால் கண்கானிப்பு கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. பள்ளிவாசல்களில்தொழுகையின் போது என்ன நடைபெறுகின்றது மற்றும் இளைஞர்களுக்குஇமாம் என்ன சொல்கிறார் என்பதை அறிந்து அவர்களை அரசாங்கம் கட்டுப்படுத்தும் முயற்சியயை மேற்கொள்ளவே இக்கெமராக்கள் பயன்படுத்தப்படுவதாக கஸகஸ்தான் எல்லைப் பிரதேசத்தல் வசிக்கும் இமாம் ஒருவர் வானோலி
நிகழ்ச்சியொன்றுக்கு தெரிவித்துள்ளார்.உஸ்பெகிஸ்தானின் மொத்த சனத்தொகையில் 96.3வீதமானேர் முஸ்லிம்களாவர்,அங்கு பாரிய இயற்கைவாயுப் படிவுகள் காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. உஸ்பெகிஸ்தானில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகக் காணப்படினும், இஸ்லாமிய தீவிரவாதத்துக்கு எதிரான
பிரச்சாரத்தினால் அந்நாட்டு முஸ்லிம்களின் மதஉரிமைகள் நசுக்கப்படுவதாகமனிதஉரிமை அமைப்புக்கள் அரசாங்கத்தை நீண்டகாலமாக குற்றம்சாட்டிவருகின்றது.
0 Comments