எகிப்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த பள்ளிவாசல்களை துருக்கி புணரமைக்கவுள்ளது.






உஸ்மானியப்பேரரசு காலப்பகுதியில் எகிப்தில் கட்டப்பட்ட பழமைவாய்ந்தபள்ளிவாசல்களை துருக்கியின் கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான நிலையத்தினால்புணரமைக்கப்படவுள்ளது. எகிப்தின் பழமைவாய்ந்த அல்அஸ்ஹர் மற்றும் அல்ஹூஸைன் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் பள்ளிவாசால்களை புணரமைப்பதற்கான ஒப்பந்தம் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்தலமை இமாம் கலாநிதி அஹ்மத் அல்தையிப் மற்றும் துருக்கியின் கூட்டுறவு மற்றும் 
அபிவிருத்திக்கான நிலையத்தின் தலைவர் சேர்டர் கம்முக்கும் இடையில் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது.உஸ்மானியபேரரசு காலத்தில் கட்டப்பட்ட இவ்விரு பள்ளிவாசல்களை மாத்திரமின்றி, இன்னும் அதிகமான பள்ளிவால்களையும் அடுத்துவரும் சிலவருடங்களில் புணரமைக்கவுள்ளதாக சேர்டர் கம்முக் 
செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.முதற்கட்ட புணரமைப்புப் பணிகள் அல்அஸ்ஹர் பள்ளிவாசலில் ஆரம்பிக்கப்படவுள்ளது. அல்அஸ்ஹர் பள்ளிவாசல்,அல்அஸ்ஹர்பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ளதுடன்,அங்கு மாணவர்கள் அடிக்கடி படிப்பதற்கு
அமைதியான இடமாகவும் விளங்குகின்றது.மேலும் இமாம்ஹூஸைன் பள்ளிவாசல்இஸ்லாமியக் கல்வியை போதிக்கும் இடமாகக் காணப்படுகின்றது.


அல்அஸ்ஹர் பள்ளிவாசல் மற்றும் இமாம்ஹூஸைன் பள்ளிவாசல் என்பன பாதிமிஹ் இஸ்லாமிய கிலாபத் காலப்பகுதியில் அதாவது கி.பி. 909-1171காலப்பகுதியில் கட்டப்பட்டது.இவ்விரு பள்ளிவாசல்களும் இஸ்லாமிய கிலாபத்தில் அடுத்தடுத்துவந்த ஆட்சியாளர்களால் புணர்நிர்மாணம் செய்யப்பட்டுவந்ததுடன்,இவை உஸ்மானிய பேரரசு காலப்பகுதியில் குறிப்பிடத்தக்கவகையில் புணர்நிர்மானம்
செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments