கடந்தவருடம் முஸ்லிம்நாடுகளில் 50மில்லியனுக்கும் அதிகமான மக்கள்அனர்த்தங்களால் பாதிப்புக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையத்தின்(OIC) சிரேஷ்ட அதிகாரி ஒருவர் துபாயில் நடைபெற்ற மனிதாபிமான மாநாட்டின் போது தெரிவித்துள்ளார்.57 உறுப்புநாடுகளைக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையத்தின் 38நாடுகளில் வாழும் 55மில்லியன்மக்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,இதனால் முஸ்லிம் நாடுகளில் மொத்தமாக 68பில்லியன் அமெரிக்க டொலர்கள் சொத்துஇழப்பு ஏற்பட்டுள்ளது. இது பற்றிய தகவல்கள் இம்மாத இறுதியில் OICஇன் வருடாந்த அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது.குறிப்பாக இதில் அரேபியஎழுச்சி போன்ற அரசியல் நெருக்கடிகளின் தகவல்கள் உள்ளடக்கப்படவில்லை.எனினும் OICஇன் உறுப்புநாடுகள்அரசியல் நெருக்கடிகளினால் ஏற்பட்ட அனர்த்தங்களை பதிவுசெய்துள்ளன. இதன்படி 2010ஆம் ஆண்டு முதல் அரசியல் நெருக்கடிகளால் ஏற்பட்ட அனர்த்தங்களால் 36நாடுகளின் 48மில்லியன்முஸ்லிம்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 58மில்லியன் அமெரிக்கடொலர்கள் சொத்துஇழப்பு ஏற்பட்டுள்ளது.முஸ்லிம் நாடுகளில் தொடர்ச்சியாக அனர்த்தங்கள் நடைபெற்றுவருவதாகவும், இவ் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு OIC மனிதாபிமான உதவிகளை மேற்கொண்டுவருவதாகவும், மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான இன் உதவிப் பொதுச்செயலாளர்
தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையமானது முஸ்லிம்உலகின்
கூட்டுக்குரலுடன் செயற்படும் ஓர் அமைப்பாகும்.இது ஐக்கியநாடுகள்
சபையின் ஓர் நிரந்தர பிரதிநிதிக்குழுவானதுடன்,ஐக்கியநாடுகள்
சபைக்கு அடுத்தாக உலகில் மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகவும்
காணப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments