சீனாவில் முதலாவதாக கட்டப்பட்ட பள்ளிவாசலாக ஹூவைசங் பள்ளிவாசல் விளங்குகின்றது.இது கலங்கரைவிளக்கப் பள்ளிவாசல் (Light House) என அறியப்படுகின்றது.சீனாவின் குதன்ங்ஹூ பிரதேசத்தில் இப்பள்ளிவாசல் அமையப்பெற்றுள்ளது. இப்பள்ளிவாசலானது கி.பி.650ஆம் ஆண்டு சீனாவுக்கு வருகைதந்த நபி(ஸல்) அவர்களின் மாமானர் ஸஈத் இப்னு அபீவக்காஸ்(றழி) அவர்களினால் கட்டப்பட்டதாக சீனாவின் வரலாற்றுக் குறிப்புக்கள் தெரிவிக்கின்றன. ஸஈத் இப்னு அபீவக்காஸ்(றழி) அவர்களின் சீனா வருகை பற்றிய சந்தேகம் நிழவுகின்றது.எனினும் கி.பி.7ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்கள் முதலில் சீனாவுக்கு வருகை தந்தனர்என்பதில் வரலாற்று ஆசிரியர்கிடையே ஒருமித்த கருத்து காணப்படுகின்றது.சீனாவில் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களாக குதன்ங்ஹூ மற்றும் யங்ந்ஹூ பிரதேசங்களில்ஹூவைசங் காணப்பட்டதுடன்,அங்கு பள்ளிவாசல்களும் அமைக்கப்பட்டுஇருந்ததாக இன்னுமொரு வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கின்றது.
ஹூவைசங் பள்ளிவாசலானது 36அடி உயரமான மினாராத்தை
கொண்டுள்ளது.இம்மினாரத்தானது இரவு நேரங்களில் கடலில் செல்லும்
கப்பல்;களை பாதுகாப்பதற்கு வெளிச்சவீடாகப் பயன்படுத்தப்பட்டது.
ஹூவைசங் பள்ளிவாசலானது பல தடவைகள் புணரமைக்கப்பட்டு
வந்துள்ளது.ஹூவைசங் பள்ளிவாலானது குவன்டா சி பள்ளிவாசல்,
ஹூவை சங் சு பள்ளிவாசல் மற்றும் யின்ங்டோங் பள்ளிவாசல் போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகின்றது.
0 Comments