அல்குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் பற்றிய கருத்தரங்குகளை அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் நடத்திவருகின்றது.










எகிப்தின் கெய்ரோ நகரில் அமைந்துள்ள அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம்
புனித அல்குர்ஆனின் விஞ்ஞான அற்புதங்கள் பற்றிய கருத்தரங்கு
தொடரொன்றை நடத்திவருகின்றது.அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின்
5ஆம் விஞ்ஞான வாரத்தின் நிகழ்வுகளின் ஓர் அங்கமாகவே 
இக்கருத்தரங்குகள் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளன.இக்கருத்தரங்குத் தொடர்ஏப்ரல்மாதம் 14ஆம் திகதி அல்அஸ்ஹர் பல்கலைக்கழக விஞ்ஞானக்கல்லூரியில் ஆரம்பமானதுடன்,இது எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி வரை நடைபெறும்.விஞ்ஞான மொழி மற்றும் எண்கள், கலங்களின்தோற்றம் மற்றும் மருத்துவ விஞ்ஞான முன்னேற்றத்தில் அவற்றின்பங்களிப்புக்கள் ஆகிய இருதலைப்புக்களில் கருத்தரங்குகள் 
நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.


உலகின் மிகப்பழமைவாய்ந்த பல்கலைக்கழகமாக அல்அஸ்ஹர்
பல்கலைக்கழகம் விளங்குகின்றது.இது கி.பி.970-972 காலப்பகுதியில்
உருவாக்கப்பட்டது.நவீன உலகில் இஸ்லாமியக் கல்வியை போதிக்கும்
சிறந்த இடமாக அல்அஸ்ஹர் பல்கலைக்கழகம் காணப்படுகின்றது.
1961ஆம் ஆண்டு அல்அஸ்ஹர் பல்கலைக்கழகத்தில் நவீன விஞ்ஞானத்
துறை கற்கைநெறிகள் ஆரம்பிக்கப்பட்டன.இவற்றில் பொறியல்துறை
மற்றும் மருத்துவத்துறை என்பன குறிப்பிடத்தக்கவைகளாகும்.




Post a Comment

0 Comments