'இஸ்லாம் மற்றும் சமாதானம்' சர்வதேச மன்றம் சவூதிஅரேபியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.








இஸ்லாம் மற்றும் சமாதானம் சர்வதேச மன்றம் சவூதிஅரேபியாவின்
தமாம் பல்கலைக்கழகத்தின் ஏப்ரல்மாதம் 16ஆம் திகதி திங்கட்கிழமை
ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இம்மன்றமானது சவூதிஅரேபியாவின் உயர்கல்விஅமைச்சர் காலித் அல்அன்காயியின் மேற்பர்வையின் கீழ் நடைபெறுவதாக சவூதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இஸ்லாம் மற்றும் சமாதானம் சர்வதேச மன்றமானது தமாம்பல்கலைக்கழகத்தின் இஸ்லாமியக்கல்வி மற்றும் இலக்கிய திணைக்களத்தினால் நிறுவகிக்கப்படுகின்றது.இதுவரை முஸ்லிம் உலகின் அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் புத்திஜீவகள் பலர் இஸ்லாம் மற்றும் சமாதானம் சர்வதேச மன்றம்மன்றத்தின் நிகழ்வுகளில் கலந்துகொணடுள்ளதுடன், முஸ்லிம்களிடம் சமாதானம் மற்றும் சகோதரத்துவத்தை கொண்டுவருவதன் அவசியத்தை அவர்கள் வலியிறுத்தியுள்ளனர்.மனித சமுதாயங்களுக்கிடையில் சமாதானத்தையும்பாதுகாப்பையும் பலப்படுத்துவதே மன்றத்தின் நிகழ்வுகளின் இலக்காகும்.




இஸ்லாமும் மனிதசமாதானமும்,இஸ்லாமும் மனஅமைதியும், இஸ்லாமும் சமூகஅமைதியும் மற்றும் இஸலாமும் பொருளாதார அமைதியும் என்பனவே மன்றத்தின் பிரதான கருப்பொருளாகும். எதிர்காலங்களில்இஸ்லாம் மற்றும் சமாதானம் பற்றிய மேலும் பல நிகழச்சிகளை 'இஸ்லாம் மற்றும் சமாதானம்' சர்வதேச மன்றம் ஒழுங்குசெய்யவுள்ளது.

Post a Comment

0 Comments