முஸ்லிம்நாடுகளில் ஏறத்தாள 52சதவீதமான மக்கள் அகதிகளாக
காணப்படுவதாக ஐக்கியநாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்
ஆணையகம் கணக்கிட்டுள்ளது.இவர்களில் புகழிடம் கோருவோர், உள்நாட்டில்இடம்பெயர்ந்தோர் என பலபிரிவினர்கள் காணப்படுகின்றனர். இது உலகில்மிகப்பெரும் தொகையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இக் கணக்கெடுப்பில் பலஸ்தீன அகதிகளின் எண்ணிக்கை உள்ளடக்கப்படவில்லை.பலஸ்தீன அகதிகள் ஐக்கியநாடுகள் சபையின் நிவாரண மற்றும் சேவைகள் நிறுவனத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளனர். இவ் உண்மைகளைக் கருத்தில் கொண்டு இஸ்லாமியக் கூட்டுறவு சங்கம்(OIC) , முஸ்லிம் உலகில் அகதிகள்என்ற தொனிப்பொருளில் சர்வதேச அமைச்சர்களுக்கிடையில் மாநாடொன்றை எதிர்வரும் மே மாதம் 10-11ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது.முஸ்லிம்நாடுகளில் வாழும் அகதிகளுக்கு, உறுப்புநாடுகளின் மூலம் உதவிகளை செய்வதே OIC இன் மாநாட்டின் முக்கிய நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments