'புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் வாசிகசாலையின் அறிவுப் பொக்கிஷங்கள்'என்ற தலைப்பில் கண்காட்சியொன்று ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவருகின்றது.இக்கண்காட்சியானது ஏப்ரல்மாதம் 28ஆம் திகதியன்று ஸாஜா ஊடக கூட்டுத்தாபனத்தின் தலைவர் செய்க் சுல்தான் பின் அஹ்மத் காஸிமியனால் திறந்துவைக்கப்பட்டது. இக் கண்காட்சியானது ஸாஜா இஸ்லாமிய
சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.சமூகத்தில் இஸ்லாத்தின் பெறுமதிகளை உணர்த்துவதே இதன் முக்கிய நோக்காகும். அரபுநாடுகளில் மதம் மற்றும் கலாசார மரபுரிமைகள் என்பவற்றை பாதுகாக்கும் நோக்கில்,இஸ்லாமிய மரபுரிமைகள் மற்றும்ஆய்வுகள் என்பன எழுத்து வடிவில் மாற்றப்பட்டு,ஸாஜா இஸ்லாமிய சங்கத்தினால் சஞ்சிகைகள் வெளியிடப்படுகின்றன என சங்கததின் தலைவர் மாஜித் புசல்பீ தெரிவித்துள்ளார்.
0 Comments