அமெரிக்காவில் மிகவேகமாக பரவிவரும் மதமாக இஸ்லாம் காணப்படுவதாக புதிய கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.








அமெரிக்காவில் மிக வேகமாகப் பரவிவரும் மதம் எது என்று உங்களுக்குத் தெரியுமா?,அது கிறிஸ்தவ மதமல்ல.2012ஆம் ஆண்டு 
மே 1ஆம் திகதி வெளியிடப்பட்ட, ஐக்கியஅமெரிக்க மதரீதியான சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி அமெரிக்காவில் மிகவேகமாக பரவிவரும் மதமாக இஸ்லாம் விளங்குகின்றது.ஐக்கியஅமெரிக்க மதரீதியான சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள்,அமெரிக்க 
மத அமைப்புக்களின் புள்ளிவிபரங்களுக்கானசங்கத்தினால் தொகுக்கப்பட்டுள்ளது.இவ் அமைப்பினால் 2000-2010ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியின் சனத்தொகைத் தரவுகளே வெளியிடப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவினுள் வசிக்கும் முஸ்லிம்களின் எண்ணிக்கையானது 1மில்லியன் முதல் 2.6மில்லியன், அதாவது 66.7சதவீதத்தலான துரித அதிகரிப்புஏற்பட்டுள்ளதாக கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.இதேவேளை அமெரிக்காவின் ஒட்டுமொத்த சனத்தொகை விகிதத்துடன் உற்றுநோக்கும் போது, கிறிஸ்தவ மதப்பிரிவுகள் வளாச்சியானது மிகக்குறைந்த அளவிலேயே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தவ மதமானது தமது செல்வாக்குள்ளவர்களை தொடர்ச்சியாக இழந்துவருகின்ற 
அதே வேளை,இஸ்லாம் மதமானது அங்கத்தவர்களை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும் நிலமை காணப்படுகின்றதுடன் வணக்கஸ்தளங்களும் அதிகமாக கட்டப்பட்டு வருகின்றன. 'நாங்கள் நீண்டகாலத்து கிறிஸ்தவ நாடாக இருக்கப்போவதில்லை' என அமெரிக்க ஜனாதிபதி பராக்ஒபாமா ஒருமுறை குறிப்பிட்டிருந்தது இங்கு சுட்டிக்காட்டப் படவேண்டியதாகும்.




ஐக்கிய அமெரிக்காவில் 2000ஆம் ஆண்டு 1200க்கும் குறைவான பள்ளிவாசல்களேகாணப்பட்டன.ஆனால் தற்போது 2106பள்ளிவாசல் காணப்படுவதாக புதிய கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன.எனினும் அமெரிக்காவில் தொடர்ச்சியாக வளர்ச்சியடைந்துவரும் மதமாக இஸ்லாம் மாத்திரம் காணப்படுவதில்லை.புதிய கணிப்பீட்டின் படி அமெரிக்காவில் 2000-2010 காலப்பகுதயில்கிறிஸ்தவம் அல்லாத மதப்பிரிவினர்கள் 32சதவீதத்தினால் அதிகரித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஏறத்தாள 150மில்லியன் மக்கள் எவ்வித மதப்பிரிவுகளையும் பின்பற்றாதவர்கள் என இப் புதிய கணிப்பீடு தெரிவிக்கின்றது.இத்தெகையானது அமெரிக்க மொத்த சனத்தொகையின் அரைவாசியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments