தேசிய இஸ்லாமிய பொருளாதார ஆணையகம் கடந்த மே 10ஆம் திகதியன்றுடியூனியாவில் திறக்கப்பட்டுள்ளது.இஸ்லாமிய பொருளாதார முறையினைநாட்டில் ஏற்படுத்தும் நோக்கிலேயே இஸ்லாமிய பொருளாதார ஆணையகம்உருவாக்கப்பட்டுள்ளது.இவ் ஆணையகம் 28உறுப்பினர்களை கொண்டுள்ளது.இஸ்லாமிய பொருளாதார ஆணையகத்துடன் இணையுமாறு டியூனியாவின் பொருளாதார ஆய்வாளர்கள் மற்றும் வங்கி முகாமையாளர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.தகாபுல் இஸ்லாமிய காப்புறுதி நிறுவனங்களை அமைத்தல்,இஸ்லாமிய நிதித்துறையை முன்னேற்றல் மற்றும் இஸ்லாமியவங்கிகளை உருவாக்கல் என்பன ஆணையகத்தின் இலக்குகளாகும்.டியூனிசியாவின் முன்னால் சர்வதிகார ஆட்சியாளரான ஸைனுல் ஆப்தின்பின் அலியின் ஆட்சிகாலத்தில் இஸ்லாமிய செயற்பாடுகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது இஸ்லாமிய பொருளாதாரத்துறையை நாட்டில்முன்னேற்றுவதற்கு முதலீட்டாளர்கள் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் போன்றோர் முயற்சிகளை ஆரம்பித்துள்ளனர்.
0 Comments