உலகின் மிகநீளமான புனித அல்குர்ஆன் பிரதியானது ஈராக்கையச் சேர்ந்தஹூஸைன் அல்கர்ஸான் என்பவரால் எழுதப்பட்டுவருகின்றது. இக்குர்ஆன்பிரதியானது 5.5கிலோமீற்றர்- 6கிலோமீற்றர் நீளமுடையதாக அமையும் என ஹூஸைன் அல்கர்ஸான் தெரிவித்துள்ளார்.பாரம்பரிய பேனா பயன்படுத்தப்பட்டுஅழகான அரபுஎழுத்துக்களால்,பாரிய காகித விரிப்புக்கள் மீது புனித அல்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்டு வருகின்றன.உலகின் மிக நீளமான குர்ஆனை எழுதிமுடிப்பதற்கு ஆறு மாதகாலங்கள் செல்லும் என ஹூஸைன்அல்கர்ஸான் குறிப்பிட்டுள்ளார். இக்குர்ஆன் பிரதியானது மொத்தமாக 503பக்கங்களை கொண்டிருக்கும், இதில் ஒருநாளைக்கு மூன்று பக்கங்கள் அல்கர்ஸானால் எழுதப்பட்டுவருகின்றது.இதுவரை உலகின் மிகநீளமானகுர்ஆனின் 13பக்கங்கள் வெற்றிகரமாக எழுதி முடிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இக்குர்ஆன் பிரதியானது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெறும் என பரவலாக நம்பப்படுகின்றது.
ஹூஸைன் அல்கர்ஸான் தனது ஒன்பதாவது வயதில் அரபு எழுத்தணி
வேலைப்பாடுகளை ஆரம்பித்தார் .உலகின்மிக நீளமான அல்குர்ஆன்
பிரதியானது ,இந்த ஆண்டில் ஈராக்கின் நஜாப் நகரில் காட்சிக்கு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.2012ஆம் ஆண்டின் உலகின் இஸ்லாமிய கலாசார தலைநகராக நஜாப் நகரம் விளங்குகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments