நபி(ஸல்) அவர்கள் மீது மதிப்புக்கேடான செய்தியை வெளியிட்டதற்காக
பாகிஸ்தானில் டுவிட்டர் சமூக இணையதளத்துக்கு குறுங்காலத்தடை
விதிக்கப்பட்டது.முஸ்லிம்களைப் பாதிக்கக்கூடிய விடயங்களை வெளியிட்டமைக்காக தமது நாட்டில் ட்விட்டர் இணையத்தளத்தை தடைசெய்த பாகிஸ்தான், திங்கட்கிழமை அந்தத் தடையை நீக்கியிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ட்விட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டதாகவும், திங்கட்கிழமை தடை நீக்கப்பட்டதாகவும் பாகிஸ்தானிய தொலைத்தொடர்பு அதிகாரசபையின் பணிப்பாளர் தெரிவித்தார். பேஸ்புக் இணையத்தளத்தில் நபி பெருமானாரின் உருவப் படங்களை வரையுமாறு கோரும் போட்டியுடன் தொடர்புடைய இணையத்தள தொடர்புகளையும், விபரங்களையும் நீக்கத் தவறியதைத் தொடர்ந்து ட்விட்டர் இணையத்தளம் முடக்கப்பட்டதாகத் தெரிகிறது.
மேலும், இதுபோன்ற செயற்பாடுகள் காரணமாக 2010,மே மாதம்
லாஹூர் நீதிமன்றம் Facebook,Twitter,YouTube போன்ற இணையதளங்களை இரு கிழமைகள் தடைசெய்யும் சட்டத்தை நடைமுறைப்படுத்தியது.நபி
பெருமானாரின் உருவப்பட விவகாரம் காரணமாக 2010 இல் பேஸ்புக் இணைத்தளமும் முடக்கப்பட்டிருந்தது இதன்காரணமாக Facebook இணையதளத்தை பாகிஸ்தானில் முற்றாக தடைசெய்யுமாறு பாரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments