பிரான்ஸின் புதியஅமைச்சரவை மூன்றுமுஸ்லிம்களை உள்ளடக்கியுள்ளது.






பிரான்ஸில் 20வருடங்களின் பின்னர் இடதுசாரிக்கட்சி ஆட்சியைக் 
கைப்பற்றியுள்ளது.மேற்படி பிரான்ஸின் புதிய ஜனாதிபதியாக பிரன்கொய்ஸ்ஹோலன்டே தெரிவிசெய்யப்பட்டுள்ளார்.ஹோலன்டே அரசாங்கம் அமைத்துள்ளபுதிய அமைச்சரவையில்,மூன்று முஸ்லிம் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.34அமைச்சர்களை உள்ளடக்கிய ஹோலன்டே அரசின் அமைச்சரவையில்மூன்று பேர் முஸ்லிம்களாவர். இவர்கள் நஜாத் வல்தூத்-பல்க்ஹசம்,யமீனா பென்கிவ்குய் மற்றும் காதிர்ஆரிப் போன்றவர்களாவர். மோரோக்கோவை பிறப்பிடமாகக் கொண்ட 34வயதுடைய பல்க்ஹசம், பெண்கள் உரிமை அமைச்சராகவும், பிரான்ஸ் அரசின் பேச்சாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது முஸ்லிம் அமைச்சரான யமீனா யமீனா பென்கிவ்குய் பிரான்ஸின் தேசிய-வெளிநாட்டு இளநிலை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மூன்றாவது முஸ்லிம் அமைச்சரான காதிர்ஆரிப், இஸ்ரேலால் குற்றம்சுமத்தப்பட்ட போர்வீரர்கள் தொடர்பில் பிரான்ஸின் வெளியுறவுத்துறை பிரச்சினைகளுக்கான இளநிலை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.


Post a Comment

0 Comments