புனித அல்குர்ஆன் பதிப்பு பற்றிய சர்வதேச விளக்கமாநாடு மதீனாவில் நடைபெறவுள்ளது.






புனிதமதீனா நகரில் அமைந்துள்ள மன்னர்பஹத் குர்ஆன் பதிப்பகத்தினால்,புனித அல்குர்ஆன் பதிப்பு பற்றிய சர்வதேச விளக்கமாநாடு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளதாக சவூதிஅரேபியாவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் அல்-அஷ்செய்க் தெரிவித்துள்ளார். உலகின் பலநாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற இஸ்லாமிய அறிஞர்கள், குர்ஆன் பதிப்பில் பாண்டித்தியம் பெற்றவர்கள் மற்றும் அரசஅதிகாரிகள் எனப் பலர் அல்குர்ஆன் பதிப்பு பற்றிய சர்வதேச விளக்கமாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.


அல்குர்ஆன் பதிப்பின் வரலாறு,அல்குர்ஆன் பதிப்பின் அறிவியல் அம்சங்கள்,அல்குர்ஆன் பதிப்பு மற்றும் வெளியீட்டின் தொழிநுட்ப வழிகள்,அல்குர்ஆன்பதிப்பில் பயன்படுத்தப்படும் பொருட்கள் மற்றும் அல்குர்ஆன் பதிப்பு மற்றும் வெளியீட்டின் தொழிநுட்பத் தன்மை ஆகிய தலைப்புகளில் புனித அல்குர்ஆன் பதிப்பு பற்றிய சர்வதேசவிளக்கவுரை மாநாட்டில் கலந்துகொள்பவர்களுடன் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.

Post a Comment

0 Comments