ஓமானின் பொது சேவைகளுக்கான பங்களிப்புகள் தொடர்ச்சியாக சர்வதேச ரீதியிலான ஒப்புதல் கிடைக்கப்பெற்றுள்ளதை அடுத்து, 2012ஆம் ஆண்டின் ஐக்கியநாடுகள் சபையின் மக்கள் சேவைக்கான விருது ஓமானுக்குவழங்கப்படவுள்ளது.ஓமானின் சுகாதார சேவையானது 24மணித்தியாலமும்மக்களுக்கு உயர்தரத்திலான சிறப்பான சுகாதார சேவைகளை வழங்கிவருகின்றது.ஓமானின் சிறப்பான சுகாதாரசேவையை கௌரவிக்கும்முகமாக,அடுத்த மாதம் ஐக்கிய அமெரிக்காவின் நியூயோர்க் நடைபெறவுள்ள விருது வழங்கும் விழாவில்,ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் சேவைக்கான மதிப்புமிகு விருது வழங்கப்படவுள்ளது."குழந்தை இறப்பு விகிதக் குறைப்பு" திட்டத்தில் இரண்டாவது இடத்தை ஓமானின் சுகாதார அமைச்சு பெற்றுக்கொண்டுள்ளதுடன்,மக்களுக்கு பொதுசேவைகளை வழங்குவதில் சுகாதார அமைச்சு பொறுப்புடன் செயற்பட்டுவருகின்றது.
மரபுவழி அணுகுமுறைகளை கையாள்வதன் மூலம் ஓமானின் சுகாதார
அமைச்சானது தாய்,குழந்தை சுகாதார தரத்தை மேம்படுத்தியுள்ளது.
குழந்தை பிறப்பின் போதான தாய் மற்றும் குழந்தை இறப்புவீதம் ஆகிய
இரண்டையும் வெற்றிகரமான முறையில் ஓமான் குறைத்துள்ளது.
ஓமானில் 1995ஆம் ஆண்டு 22விகிதத்தில்(100,000 பிறப்புகளுக்கு) காணப்பட்டஇறப்பு விகித்தை, 2009ஆம் ஆண்டு 13.4விகிதத்துக்கு குறைக்கப்பெற்றுள்ளது. மேலும் 1995ஆம் 20விகிதத்தில் (1000பிறப்புகளுக்கு) காணப்பட்ட சிசுமரண விகதமானது, 2009
ஆண்டாகும் போது 9.6 விகிதத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.
0 Comments