ஹிஜாப்,நிகாப் அணிதல் பெண்களின் விட்டமின் 'D' குறைபாட்டை குறைக்குமென புதிய ஆய்வொன்று தெரிவிப்பு.



ஹிஜாப்,நிகாப் அணிவதன் மூலம் பெண்களின் விட்டமின்'D' குறைபாடு
வீழ்ச்சியடையும் என ஜோர்த்தானின் புதிய ஆய்வொன்று தொவிக்கின்றது.ஜோர்தானின் நீரிழிவு மற்றும் மரபியல் தேசிய நிலையம் நடத்திய ஆய்விலேயேஇத்தகவல் வெளியாகியுள்ளது. 5.1வீதமான ஆண்களுடன் ஒப்பிடும் போது, 37.3 சதவீதமான பெண்கள் குறைந்தளவிலான விட்டமின்'D'  மட்டத்தை கொண்டுள்ளதாக
இவ்ஆய்வில் குறிப்பிடுகின்றது.எனினும், ஹிஜாப் மற்றும் நிகாப் அணியும் பெண்களின்விட்டமின்'D' மட்டமானது,தலையை மறைக்காத பெண்களின் விட்டமின்'D' மட்டத்திலும் உயர்வடைந்து காணப்பட்டதாக இவ்ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஜோர்தானின் நீரிழிவு மற்றும் மரபியல் தேசிய நிலையம் நடத்திய ஆய்விள், நிகாப் அணியும் பெண்களில் விட்டமின்'D' மட்டமானது 36.5சதவீதமாகவும்,ஹிஜாப்
அணியும் பெண்களின் விட்டமின்'D'  மட்டமானது 37.9சதவீPதமாகவும், தலையைமறைக்காத பெண்களின் விட்டமின்'D' மட்டமானது 29.5சதவீதாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விட்டமின்'D'குறைபாடு அல்லது விட்டமின்'D' போதாமையினால்  உலகம் முழுதும் ஏறத்தாள ஒரு பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கோடைகால மாதங்களில் இரண்டு முதல் மூன்று வாரகாலப்பகுதியில் 5முதல் 15நிமிடங்கள்,கைகள் மற்றும் முகம் போன்ற இடங்களில் சாதாரண சூரிய ஒளிபடுவதன் மூலம் விட்டமின்'D' மட்டத்தை உயாந்தளவில் பேணமுடியும் என உலகசுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது.

Post a Comment

0 Comments