15ஆம் நூற்றாண்டின் உலக மரபுரிமைச் சொத்தான திம்புக்டு பள்ளிவாசல் அழிக்கப்பட்டுள்ளது.








மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் அமைந்துள்ள திம்புக்டு பள்ளிவாசலானது,அன்ஸார்தீன் எனப்படும் அல்-குவைதா அமைப்புடன் தொடர்புடைய  தீவிரவாதக் குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட திம்புக்டு பள்ளிவாசலானது ஐக்கியநாடுகள் சபையின் யுனேஸ்கோ அமைப்பினால் அங்கீகரிக்கப்பட்ட உலக மரபுரிமைச் சொத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.இத்தீவரவாத அமைப்பானது தொடர்ச்சியாக கலாச்சாரப் பொக்கிஷங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.கடந்த சனிக்கிழமை அன்ஸார்தீன் தீவிரவாத அமைப்பானது,பல நூற்றூண்டுகள் பழமைவாயந்த முஸ்லிம் ஞானிகளின் மக்பராக்களை அழித்துள்ளனர். மேலும் திங்கட்கிழமையன்று திம்புக்டுவின் சித்தியஹ்யா பள்ளிவாசலை அவர்கள் அழித்துள்ளனர்.சித்தியயஹ்யா பள்ளிவாசலானது திம்புக்டுவின் மூண்று பெரிய பழமைவாய்ந்த பள்ளிவாசல்களில் ஒன்றாவதுடன்,இவை நகரின் பொற்காலத்தில் அதாவது பாலைவான  குறுக்குப்பாதை மற்றும் கற்றலுக்கான மையமாக திம்புக்டு  இருந்தவேளை, கி.பி.1400 ஆண்டில் கட்டப்பட்டதாகும் என யுனேஸ்கோவின் உத்தியோனபூர்வ இணையதளம் குறிப்பிடுகின்றது. வரலாற்று ரீதியான திம்புக்டு பள்ளிவாசல் அழிக்கப்பட்டதானது ஓர் போர்குற்றமாகும் என சர்வதேச குற்றவியல்  நீதிமன்றத்தின் வழக்கறிஞரான பத்துஹ் பேன்சுடா தெரிவித்துள்ளார். பழமைவாய்ந்த
இஸ்லாமிய  மரபுரிமைச் சொத்துகள் மீதான தாக்குதல்களானது, ஆபிரிக்காவில் முஸ்லிம்களின்  இருப்பிற்கான வரலாற்றுரீதியான சான்றுகளை கேள்விக்குள்ளாக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments