அஸ்ட்ரியாவில் முஸ்லிம்சமூகத்திடையே இஸ்லாம் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவை அஸ்ட்ரிய அரசு கொண்டாடியுள்ளது. அஸ்ட்ரியாவில் கத்தோலிஸம், லித்தோனிஸம், யூடிஸம் மற்றும் பௌத்தம் போன்ற மதங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதே மதசுந்திரம் இஸ்லாத்துக்கும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.ஐரோப்பாவில் இஸ்லாத்துடன் சிறந்தமுறையில் நடந்துகொள்ளும் முன்மாதிரி நாடாக அஸ்ட்ரியா காணப்படுவதாக வியன்னா நகரசபை அங்கத்தவர் உமர் அல்ராவி தெரிவித்துள்ளார். இஸ்லாமிய சட்டம் அங்கீகரிக்கப்பட்டு நூற்றாண்டு நிறைவு விழாவை அஸ்ட்ரிய அரசு ஏற்பாடுசெய்துள்ளதன் மூலம் அஸ்ட்ரியாவியாவில்
இஸ்லாம் உத்தியோகபூர்வ மதமாகக் அங்கீகரிக்கப்பட்டுள்ளதை காட்டுகின்றது என உமர் அல்ராவி மேலும் தெரிவித்துள்ளார்.1912ஆம் ஆண்டு ஹஸ்பேர்க் பேரரசனான பிரான்ஸ் ஜோகெப் காலத்தில் போஸ்னியா-ஹேர்ச்சிக்கோவினார்களை அஸ்ட்ரியர்களாக இணைத்துக்கொள்ளக்கோரிய பின்னணியிலே இச்சட்டானது வற்புறுத்ததிக் கொண்டுவரப்பட்டது.அதவாது ஹிஸ்பேர்க் இராணுவத்தில் போஸ்னிய முஸ்லிம் இராணுவ வீரர்களை ஒன்றினைக்கும் முயற்சியின் போது,ஹனபி மத்ஹப் சட்டத்தை கடைபிடிப்பதற்கு உரிமை வழங்கப்படவேண்டும் என்ற அடிப்படையிலே முதலவாதாக இஸ்லாமிய சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பிற்காலத்தில் இச்சட்டமானது விரிவுபடுத்தப்பட்டு, ஏனைய சுன்னி முஸ்லிம் பிரிவுகளும்,ஷியாக்களும் உள்ளடக்கப்பட்டனர்.மேலும் உள்நாட்டு பாடசலைகளில் முஸ்லிம்கள் மார்க்கல்வியை கற்றல், நாட்டின் உள்விவகாரங்களை நிர்வகித்தல்,பொது இடங்களில் தொழுதல் போன்ற பரந்தஅளவிலான மதஉரிமைகள் வழங்கப்பட்ட தனிச்சிறந்த ஐரோப்பிய நாடாக அஸ்ட்ரியா விளங்குகின்றது.
அஸ்ட்ரியாவில் கிறிஸ்தவ மதத்துக்கு அடுத்தாக மிகிவேகமாக வளாந்துவரும் மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது.2010ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் படி அஸ்ட்ரியாவில் 500,000 முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இத்தெகையானது அஸ்ட்ரியாவின் மொத்த சனத்தொகையில் 6சதவீதமாகும்.அஸ்ட்ரிய அரச பாடசாலைகளில் ஏறத்தாள 60,000 மாணவர்கள் மார்க்கக் கல்வியை பெற்றுவருகின்றனா. இதேவேளை2005ஆம் ஆண்டு நபி(ஸல்) அவர்களுக்கு எதிரான டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்தரத்திற்கு பதில் வழங்கும் முகமாக,2007ஆம் ஆண்டு நடாளாரீதியில் நபி(ஸல்) அவர்களையும், அன்னவர்களின் போதனைகளையும் நாட்டுமக்களிடையே அறிமுகப்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பிராச்சாரங்கள் பெரும்வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments