கால்பந்தாட்டப் போட்டிகளில் முஸ்லிம்பெண்கள் ஹிஜாப் அணிந்து விளையாடுவதற்கு பீபா அனுமதி வழங்கியுள்ளது.








சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் முஸ்லிமபெண்கள் ஹிஜாப் 
அணிந்து விளையாடுவதற்கு சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான,பீபா 
அனுமதி வழங்கியுள்ளது.இதனால் முஸ்லிம்  கால்பந்தாட்ட 
வீராங்கனைகளுக்கு சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
முழு உலகிலுமுள்ள அனைத்து முஸ்லிம் கால்பந்தாட்ட வீராங்கனைகளை தாம் வாழ்ததுவதாகவும்,ஆடுகளத்தில் முஸ்லிம் வீராங்கனைகள் தமது திறமைகளை முன்னேற்றுமடையச் செய்வதை தாங்கள்  எதிர்பார்ப்பதாகவும் பீபா சம்மேளனத்தின் பிரதித்தலைவரும்,
செயற்குழு உறுப்பினருமான ஜோர்த்தான் இளவரசர் அலிபின் 
அல் ஹூஸைன் தெரிவித்துள்ளார்.இவர், கால்பந்தாட்ட விளையாட்டில்
முஸ்லிம் பெண்களுக்கு ஹிஜாப் அணிந்து விளையாடுவதற்கான
உரிமை வழங்கப்படவேண்டும் என்று பலவருடங்களாக அழைப்பு
விடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஹிஜாப் அணிந்து
விளையாடுவதற்கான தடை 2007ஆம் ஆண்டு பீபா சம்மேளனத்தினால்
கொண்டுவரப்பட்டது.இதேவேளை,முஸ்லிம் வீராங்கனைகளுக்கு
கால்பந்தாட்டப் போட்டிகளில் ஹிஜாப் அணிந்து விளையாடுவதற்கு
சர்வதேச கல்பந்தாட்டச் சபையினால் கடந்த மார்ச்மாதம் அனுமதி 
வழங்கப்பட்டிருந்தது.எனினும் சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளில் 
ஹிஜாப் அணிந்து விளையாடுவதற்கான பீபா சம்மேளனத்தின் 
அனுமதி ஜூலை 5,வியாழக்கிழமையன்று வழங்கப்பட்டது.


பீபா சம்மேளனமானது சர்வதேச கால்பந்தாட்ட சங்களின்
கூட்டமைப்பாக விளங்குகின்றது.209நாடுகள் பீபா சம்மேளனத்தில்
அங்கத்துவம் வகிக்கின்றன.உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி
உட்பட சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளுக்கு பொறுப்பான
அமைப்பாக பீபா சம்மேளனம் காணப்படுகின்றது.


Post a Comment

0 Comments