மியன்மாரில் பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களால் முஸ்லிம்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.








மியன்மாரின் வடக்கு அர்கன்(ரக்கின்) பிரதேச முஸ்லிம்கள் மீது 
அண்மைக்காலமாக பௌத்த இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்டு 
வரும் தாக்குதல்களால் இது வரை ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் 
படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.ஜூலை மாதம் 3ஆம் தகதி,ரக்கின்
பிரதேசத்தின் மேற்குப்பகுதியில் பௌத்த பிக்குகள் கும்பலொன்றால் 
பஸ்ஸில் இருந்து இறக்கப்பட்டு 10 ரூகின்யா முஸ்லிம்கள் 
கொல்லப்பட்டதன் பின்னணியில் தாக்குதல்கள் கட்டவிழ்த்து 
விடப்பட்டன.ரக்கின் பிரதேசத்தில் பௌத்த பெண்னொருவர் 
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்ட சம்பவத்துக்கு
முஸ்லிம்களை காரணம்காட்டி,முஸ்லிம்கள் மீது பௌத்த இனவாதத் 
தாக்குதல்கள் நடத்தப்பட்டன.இத்தாக்குதல்களினால் சிறுவர்கள், 
பெண்கள் உட்பட அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.உள்நாட்டு 
இராணுவப்படையினர் மற்றும் பொலிஸார் முஸ்லிம் சிறுபான்மையினை பாரபட்சமாக நடத்திவருகின்றனர்.மேலும் இராணுவத்தினர் திட்டமிட்டு ரூகின்யா முஸ்லிம்களை தவறான முறையில் வழிநடத்துவதாக மனித உரிமை கண்கானிப்பகம் தெரிவித்துள்ளது.இதேவேளை,ரக்கின் பிரதேசத்தில் 2230க்கும் அதிகமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் மீது தீ வைக்கப்பட்டு முற்றாக சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் 90,000க்கும் அதிகமான மக்கள் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.ரக்கின் பிரதேசத்தில் கொலை மற்றும் ஏனைய குற்றச்செயல்கள் செயல்களில் ஈடுபட்டவர்களை கைதுசெய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 53மில்லியன் மக்களைக் கொண்ட மியன்மாரின் மொத்த சனத்தெகையில் 5சதவீதத்தினராகமுஸ்லிம்கள் காணப்படுவதுடன் ரக்கின் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெருன்பான்மையாக வாழ்கின்றனர்.மியன்மார் முஸ்லிம்களில் பெருன்பான்மை இனத்தவர்களாக ரூகின்ங்கஸ் என அறியப்படுகின்ற பங்காளி இனத்தவர்கள் காணப்படுகின்றனர். மியன்மாரின் 1982குடியுரிமை சீர்த்திருத்த சட்டத்தின் படி ரூகின்ங்கஸ் முஸ்லிம்களின் குடியுறரிமை மறுக்கப்பட்டுள்ளது.ரூகின்ங்கஸ் முஸ்லிம்களின் அங்கீகாரத்தை பெருன்பான்மை பௌத்த அரசு மறுத்துவருகின்றது.




மியன்மார் சிறுபான்மை முஸ்லிம்களுடன்  இராணுவத்தினர் 
மிருகத்தனமாக நடந்து கொண்டுவருகின்றனா என மனித உரிமை 
கண்கானிப்பகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த ஜூன் 28ஆம் திகதிமியன்மார் பாதுகாப்புப் படையினர் மன்கடோ அருகே கிரமவாசிகள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர். இவ்வன்முறையால் அவர்கள் அருகே உள்ள காடுகளில் மறைந்து தம்மை பாதுகாத்துள்ளதாக செய்தியொன்று தெரிவிக்கின்றது.அனைரும் கடுமையான பயத்தில்காணப்பட்டதாக இச்சம்பவத்தில் உயிர்தப்பிய ஒருவர் மனித உரிமைகண்கானிப்பகத்திடம் தெரிவித்துள்ளார். மியன்மார் பாதுகாப்புப்  படையினர் தமது கிராமத்தில் நுழைந்ததாகவும், இதன்போது மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான கிராமத்திலிருந்து தப்பிச்செல்லமுயன்றதாகவும்,தப்பிச்செல்லும் வழியில் ஒரு கால்வாய் காணப்படதால் அதிகமானோர் படையினரின் தாக்குதல்களால் கொல்லப்பட்டதாக,தாக்குதலில் உயிர்தப்பியவர் மேலும் தெரிவித்துள்ளார்.மியன்மாரின் அர்கான் பிரதேச வன்முறைகளால்  கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கைஇதுவரை  சரியாக அறியப்படவில்லை.எனினும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கொலைசெய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

























































Post a Comment

0 Comments