ஈரான் அணுவிஞ்ஞானிகளின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலின்
உளவு அமைப்பான மோசாட் செயற்பட்டுள்ளதாக அண்மையில் வெளியிடப்பட்ட "இஸ்ரேலின் இரகசிய போர்களின் உள்ளே: ஆர்மெக்கெடோன் எதிர் உளவாளிகள்" என்ற புத்தகம் தெரிவிக்கின்றது. அமெரிக்காவின் பிரபல ஊடகவியலாளரும்,சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் தேசிய செய்தியாளருமான டான் ரவிவ் மற்றும் இஸ்ரேல் எழுத்தாளரும், இஸ்ரேலின் ஹார்டஸ் பத்திரிகையின் புலனாய்வு, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான செய்தியாளருமான யோசி மெல்மம் ஆகியோர் இப்புத்தகத்தை எழுதியுள்ளனர். ஈரானின் அணுவிஞ்ஞானிகளின் கொலைகளை இஸ்ரேலின் உளவுப்பிரிவான
மோசாட் மேற்கொண்டதாக ஏற்கனவே ஈரான் தெரிவித்துவந்தது. ஆகக்குறைந்ததுஈரானின் நான்கு அணுவிஞ்ஞானிகள் கொலை செய்யப்பட்டதானது இஸ்ரேலின் நடவடிக்கையாவதுடன்,அவர்களை கொலைசெய்வதற்காக மோட்டர் சைக்கிளில் இல்லக்கு வைத்தது அடங்களான படுகொலை செய்யும் நுட்பம் இஸ்ரேலின் உளவமைப்பான மேசாடினால் மேற்கொள்ளப்பட்டதாக இப்புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஈரான் அணுவிஞ்ஞானிகள் கொலை நடவடிக்கைகள்
பற்றி மோசாட் தகவல்கள் வெளியிடவில்லை.ஏனெனில் அது மோசாடின் இரகசியமாகும்.அது இரகசியம் என்பதால், அந்நடவடிக்கைக்கு இஸ்ரேலின் பிரதமர் தனிப்பட்ட முறையிலேயே கையொப்பம் இட்டார்.மேலும்,ஈரானின் அணுவிஞ்ஞானிகளை ஏற்காதவர்களின் உதவியால் இக்கொலைகள் மேற்கொண்டிருக்கப்பட வேண்டும்.ஆனால்,மோசாட் நேரடியாக இக்கொலையை மேற்கொள்ளவில்லை,மோட்டார் சைக்கிளை பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளும் செய்முறையும்,பயிற்சியும் மோசாடின் நிகழ்ச்சி நிரலில் உள்ளது என நூலசிரியரான டான் ரவிவ் தெரிவித்துள்ளார்.ஈரானின் அணுத்திட்டத்தை அமெரிக்க இராணுவ வல்லமையால் அழிக்கவேண்டும் என தாம் எதிர்பார்ப்பதாகவும்,அமெரிக்கா அதனை
மேற்கொள்ளவில்லையென்றால்,ஈரானின் அணுஆலைகளை அழிப்பதற்கு இஸ்ரேல் தனிமையாக ஈரானை அச்சுறுத்தும்.ஈரானின் மீது கடுமையான நிதி நெருக்கடி நிலமைகளை ஏற்படுத்தி,அதன் அணுத்திட்டத்தின் முன்னேற்றத்தை தடுக்க வேண்டும் என இஸ்ரேல்,அமெரிக்க ஐனாதிபதி ஒபாமாவிடம் தெரிவித்தாக இப்புத்தகம் குறிப்பிடுகின்றது.
ஈரனின் நான்கு அணுவிஞ்ஞானிகள் இதுவரை மோசாட் அமைப்பினால் கொல்லப்பட்டுள்ளனர்.இஸ்ரேலின் உளவுப்பிரிவான மேசாட் 1949ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக விளங்கிய முஸ்லிம் உலகில் தலைசிறந்த விஞ்ஞானிகள், இராணுவ அதிகாரிகள், எழுத்தாளர்கள்,தலைவர்கள் எனப் பலரை மோசாட் அமைப்பு கொலை செய்துள்ளது.கடந்தவருடம் காலஞ்சென்றபலஸ்தீனின் ஜனாதிபதி யஸீர் அரபாத்,மோசாட் அமைப்பினால்நஞ்சூட்டிக் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments