இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை தோற்கடிக்கச்செய்யும் நோக்கில்,பலஸ்தீனின்ஆக்கிரமிக்கப்பட்ட நகரங்களில் இஸ்ரேலிய உற்பத்திப்பொருட்களை பகிஷ்கரிப்பதற்கான இரண்டாம்கட்ட பத்ர் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.பத்ர் பிரச்சார நடவடிக்கைகள் பலஸ்தீன முன்முயற்சிக்கழகம் முன்னெடுத்துள்ளது. பலஸ்தீனில் தரமான,விலைநிர்ணயிக்கப்பட்ட உள்நாட்டு உற்பத்திப்பொருட்கள் காணப்படுகின்ற போதிலும், பலஸ்தீன சந்தைகளில் வருடந்தோரும் பலமில்லியன் டொலர் பெறுமதியான இஸ்ரேலிய உற்பத்திப் பொருட்கள் விற்பனைசெய்யப்படுவதாகவும், இஸ்ரேலிய உற்பத்திகளை பகிஷ்கரிப்பதை நோக்காகக் கொண்டே இரண்டாம்கட்ட பத்ர் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதாக பலஸ்தீன முன்முயற்சிக்கழகத்தின் தலைவர் முஸ்தபா பர்கூதி
தெரிவித்துள்ளார்.ரமல்லாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது இரண்டாம் கட்ட பத்ர் பிரச்சார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் முதலாம் கட்டப் பிராச்சார நடவடிக்கைகள் மூலம் மேற்குக்கரையில் நுகரப்பட்டுவந்த இஸ்ரேலிய உற்பத்தி குளிர்பானப் பொருட்கள்,70சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆக்கிரமிப்புப் பகுதிகளில் ஏறத்தாள 4பில்லியன் பெறுமதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றது.இது ஐரோப்பாவிற்குப் பின்னர் இரண்டாவது வெளிநாட்டுச் சந்தையாகவும் விளங்குகின்றதுடன்,இதன்மூலம் கிடைக்கப்பெறும் இலாபம் பலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேலிய வீடமைப்புத்திட்டங்களை உருவாக்கப் பயன்படுத்தப்படுவதாக முஸ்தபா பர்கூதி மேலும் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியப் பொருட்களை வெவ்வேறு காலங்களில் உலகநாடுகள் பகிஷ்கரித்ததன் மூலம் இஸ்ரேலிய நிறுவனங்கள் பாரிய இழப்புக்களை சந்தித்தன.ஒவ்வொருவரும் இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிப்பதன் மூலம் இஸ்ரேலின் பொருளாதாரத்தில் பாரிய வீழ்ச்சியைக் கொண்டுவரமுடியும்.
இஸ்ரேலிய உற்பத்திகள்:
0 Comments