சிரியாவின் டமஸ்கஸ் நகரில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்புத் தலமையகத்தில்நடைபெற்ற குண்டுவெடிப்பில் சிரியாவின் பாதுகாப்புஅமைச்சர் தாவூத் ரஜீஹா,பிரதிப்பாதுகாப்பு அமைச்சர்
ஆஸிப் ஷக்வத்,பாதுகப்புத்தலைமை அதிகாரி ஜெனரல் ஹிஸாம் இக்திஹார் மற்றும் உதவித்துணை ஜனாதிபதி ஹஸ்ஸான் துக்மேனிஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.சிரியாவின் தேசிய பாதுகப்புத் தலைமையகத்தில் ஜூலை 18,புதன்கிழமையன்று சிரியாவின் அமைச்சரவை அதிகாரிகளுக்கும்,பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்குமிடையே நடைபெற்றுக் கொண்டிருந்த கூட்டத்தின் போதே குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இக்குண்டுத்தாக்குதலில் சிரியாவின் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் முஹம்மத் இப்ராஹீம் அல்ஸார் உட்பட மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சுதந்திர சிரிய இராணுவமும் மற்றுமோர் ஆயதக்குழுவும் குண்டுத்தாக்குதலுக்கு உரிமைகோரியுள்ளன. குண்டுத்தாக்குதலை நடத்தியதாக சந்தேகிப்படுவோர் சிரிய தேசிய பாதூகாப்புத் தலமையகத்தில் அதிகாரிகளின் மெய்ப்பாதுகாவலர்களாக கடமையாற்றியோர் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் நாட்களில் பாரிய வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறும் என சுதந்திர சிரிய இராணுவம் தெரிவிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை இஸ்ரேலுக்குச் சொந்தமானசெய்மதிகளின் துணையுடன் பயங்கரவாதிகள் சிரிய அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை இலக்குவைக்க திட்டமிட்டுள்ளதாக அரேபிய ஊடகமொன்று அண்மையில் செய்திவெளியிட்டிருந்தது.சிரியாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ஜெனரல் பஹத் அல்ஜஸீம் அல்பரீஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments