ஹிஸ்புல்லாஹ் அமைப்புக்கு சிரியா ரொக்கட் ஆயுதங்கள் அல்லது இரசாயன ஆயுதங்கள் வழங்கினால்,சிரியா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் எஹூத் பரக் அமெரிக்க ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.நவீன வான்தாக்குதல் எதிர்ப்பு ஆயுதங்கள்,நவீன படைக்கல முறைகள் மற்றும் கனரக ஆயதங்கள் போன்ற நவீன பாதுகாப்பு ஆயுதமுறைகள் ஹிஸ்புல்லாவுக்கு பரிமாற்றம் செய்யப்படுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும், சிரிய ஜனாதிபதியை ஆட்சி கவிழ்பதற்காக ஏனைய புலனாய்வு நிறுவனங்களுடன் ஒன்றுபட்டு செயற்படப்போவதாகவும் பரக் மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை சிரியாவில் கண்கானிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மேலும் 30நாட்கள்
நீடிப்பதற்கான பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையின் பாதூகப்புச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.கடந்த வருடம் மாhச்,11முதல் சரிய அரசாங்கத்துக்கு ஆதரவாகவும்எதிராகவும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.சட்டத்துக்கு புறம்பாக செயற்படுவர்கள், ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகள் போன்றோர் நாட்டில் அமைதியின்மை மற்றும் கொலைச்சம்பவங்களில் ஈடுபட்டுவருவதாக சரிய அரசாங்கம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றது.இஸ்ரேலுக்கு தொடாச்சியாக ஹிஸ்புல்லாஹ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தவரும் நிலையில்எஹூத் பரக்கின் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments