முஸ்லிம்நாடுகளுக்கிடையில் கல்விசார் நடவடிக்கைகளை பரிமாற்றிக் கொள்ளும் நோக்கில்,இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையத்தினால் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருவதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன் ஒருகட்டமாக இஸ்லாமியஒத்துழைப்பு அமையத்தின் உறுப்புநாடுகளுக்கு இடையில் கல்விநடவடிக்கைகளுக்காகமாணவர்களை பரிமாற்றிக்கொள்ளும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.உலகின் 4கண்டங்களில்உள்ள 57உறுப்புநாடுகளுக்கிடையில் புலமைப்பரிசில்கள் வழங்கள்,ஆசரியர் பரிமாற்றங்கள்,தெலைத்தூர கல்வி நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கள் மற்றும் ஆய்வுநடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் இஸ்லாமியஒத்துழைப்பு அமையம் அறிவித்துள்ளது.மலேசியா இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் கடந்தமாதம் 10 புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டதாகவும்,மானிய அடிப்படையில் பாகிஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரியில் 50புலமைப்பரிசில்களும் வழங்கப்படவுள்ளதாகவும் இஸ்லாமியஒத்துழைப்பு அமையத்தின் விஞ்ஞான தொழிநுட்ப திணைக்களத்தின் பணிப்பாளர் கம்ரன் அக்தார் தெரிவித்துள்ளார். சவூதிஅரேபியா மற்றும் அஸர்பைஜான் போன்ற நாடுகளில் கல்விப் புலமைப்பரிசில்களுக்கான இடங்கள் வழங்கப்படுமென உறுதியளித்துள்ளதாகவும் கம்ரன் அக்தார்மேலும் தெரிவித்துள்ளார். உறுப்புரிமையற்ற நாடுகளுடனும் கல்விசார் நடவடிக்கைகளை பரிமாற்றிக் கொள்வதற்கான வாய்ப்புகள் பற்றியும் ஆராயப்பட்டு வருகின்றதாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையம் தெரிவிக்கின்றது.ஐக்கிய நாடுகள் சபைக்கு அடுத்தபடியாக, உலகின்இரண்டவாது அரசாங்களுக்கு இடையிலான ஆணையகமாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமையம் விளங்குகின்றது.
0 Comments