இந்தோனேசிய பள்ளிவாசல்கள் உயர்தொழிநுட்ப ஒலிபரப்புமுறைமைகளுக்காக முதலீடுசெய்துள்ளன.




இந்தோனேசிய பள்ளிவாசல்கள் புனித ரமழான் காலத்தில் மக்களை தொழுகைக்கு அழைப்பதற்காக சிறந்த ஒலிபெருக்கி முறைகளை பயன்படுத்தும் நோக்கில் உயர்தொழிநுட்ப ஒலிபரப்புமுறைகளுக்காக முதலீடுசெய்துள்ளன.உலகில் அதிகூடிய பெரும்பான்மை முஸ்லிம் சனத்தொகையைக் கொண்ட இந்தோனேசியாவில்,ஏறத்தாள 800,000 பள்ளிவாசல்கள் காணப்படுகின்றன.இப் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக அழைப்பதற்கு தரம்குறைந்த,தவறாக ஒருங்கிணைக்கப்பட்ட ஒலிபெருக்கிகள் பயன்படுத்தப்படு வருவதானால் எரிச்சல் அதிகரித்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நிவர்த்தி செய்து ரமழான் காலத்தில், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு சிறந்த ஒலிபரப்புமுறையை வழங்குவதற்காகஉயர்தரத்திலமைந்த ஒலிபெருக்கிகளை பள்ளிவாசல்கள் பயன்படுத்தவுள்ளன.அருகருகே காணப்படும் பள்ளிவாசல்கள் ஒன்று,அடுத்ததைவிட ஒலிபெருக்கி சத்தங்களை அதிகரிப்பதால் அவற்றிக்கிடையேயான ஒலிபெருக்கிச் சத்தப் பிரச்சினை ஏற்படுவதாக இந்தோனேசிய உலமா கவுன்ஸிலின் தலைவர் அமீதான் தெரிவித்துள்ளார்.சில பள்ளிவசல்கள் சிறப்பான ஒலிபரப்புமுறையை பெற்றுக்கொள்வதற்காக சிறந்த ஒலிபெருக்கிகளை நாடுகின்றன.இவ்வாறான ஒலிப்பிரச்சினைகளை தீர்க்கும் பொருட்டு ஜாஸ் லொன்ங் தரத்திலான அல்கரீம் ஒலிபெருக்கி முறைமைகள் பயன்படுத்துவது பொருத்தமானதாகும் என ஒலிபரப்புமுறைகளுக்கான ஜனாதிபதி ஆலோசகர் ஹரிகிஸ்வோ தெரிவித்துள்ளார்.அதிகமான பள்ளிவாசல்கள்  அல்கரீம் ரக ஒலிபெருக்கி முறைகளுக்காக சாதாரண ஒலிபெருக்கி முறைகளை விடவும் இருமடங்கு பணம்செலுத்திப் பெற்றுக் கொள்வதற்கு  தயாராக இருப்பதாகவும் ஹரிகிஸ்வோ மேலும் தெரிவித்துள்ளார்.பராம்பரிய இஸ்லாமிய அடையாளங்களை வெளிப்படுத்துவதில் இந்தோனேசிய முஸ்லிம்கள் கூடுதல் ஆர்வம்காட்டி வருகிறார்கள்.முஸ்லிம்பெண்கள் இஸ்லாமிய ஆடைகளை அணிவதும்,பெரிய நகரங்களில் புனித அல்குர்ஆன் ஓதும் நிகழ்வுகளும் அதிகரித்துவருவதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.



Post a Comment

0 Comments