உலகில் ஏழு பேரில் ஒருவர் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.




உலகின் மொத்த சனத்தொகையில் ஏழுபேரில் ஒருவர் என்ற விகிதத்தில் பசியால் வாடுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன.35சதவீதமான சிறுவர் மரணங்கள் பட்டினியால் ஏற்படுகின்றதாகும் என தெரிவிக்கப் படுகின்றது.உலகில் 925மில்லியன் மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.1996ஆம் ஆண்டு இத்தொகை 820மில்லியனாகவும்,2003-2005 காலப்பகுதியில் பட்டினியால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 852மில்லியான உயர்வடைந்திருந்ததாக ஐக்கியநாடுகள் சபையின் உலக உணவுத்திட்ட சிறப்புப் பதிவாளரான பேரசிரியர் டி.ஸ்கடுர்,துபாயில் நடைபெற்ற
மாநாடொன்றில் தெரிவித்துள்ளார்.உலகசனத்தெகையானது ஒவ்வொரு 3033வருடங்களில் இருமடங்காக அதிகரிக்கின்றதுடன்,2070ஆம் ஆண்டளவில் உலகமொத்த சனத்தெகையானது 10.3பில்லியனை அடையுமெனவும்,2030ஆண்டில் உலக உணவுத்தேவைக்காக விவசாய உற்பத்திகளை 60சதவீதத்தால் அதிகரிக்க வேண்டும் எனவும் பேராசிரியர் டி.ஸ்கடுர் மேலும் தெரிவித்துள்ளார்.மேலும் 2015ஆம் ஆண்டளவில் உலகசனத்தொகையில் 10சதவீதமானோர் பட்டினியால் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகின்றது.


உலகில் பட்டினிப்பாதிப்பு பற்றி ஐக்கியநாடுகள்சபை உணவுத் திட்டடத்தின் சில தகவல்கள்:

உலகில் ஒவ்வொருவருடமும் எயிட்ஸ்,மலேரியா,டியூபர்குலோசியஸ் ஆகிய நோய்களால் இறப்பவர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிகமானவர்கள் பட்டினியால் இறக்கின்றனர்.

அமெரிக்கா,கனடா மற்றும் ஐரோப்பியநாடுகளின் மொத்த
த்தொகையை விடவும் அதிகமானவர்கள்உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகில் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ள 925மில்லியன் மக்களில் 98சதவீதமானோர் வளர்முகநாடுகளை சேர்ந்தவர்களாவார்.

இந்தியா,சீனா,பங்களாதேஷ்,இந்தோனேசியா,கொன்ங்கோ,பாகிஸ்தான்,எதியோப்பியா ஆகிய 7நாடுகளில் மட்டும் 65சதவீதமான மக்கள் பட்டினியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வளர்முக நாடுகளின் நான்கு சிறுவர்களில் ஒருவர் என்ற ரீதியில் நிறைக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments