எகிப்தின் ஸினாய் பிரதேசத்தில் அமைந்துள்ள ரபா எல்லைப் பகுதி இராணுவவீரர்கள் பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து எகிப்தையும், காஸாவையும் இணைக்கும் ரபா எல்லை மூடப்பட்டுள்ளது.ரபா எல்லையில் அமைந்திருக்கும்,எகிப்தின் எல்லைப்பகுதி இராணுவீhர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 16இராணுவ அதிகாரிகள் கொல்லப்ப்டுள்ளதாக எகிப்தின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ரபா எல்லையின் பாதுகாப்பு சோதனைச் சாவடியின் இராணுவவீரர்கள் மீது ஆயுதாரிகளால் மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன்,அவர்ளால் இரண்டு இராணுவ வாகனங்கள்
கைப்பற்றப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.எகிப்து,காஸா மற்றும் இஸ்ரேல் எல்லைகள் ஒன்றுசேரும் இடத்தில் நடைபெற்ற இத்தாக்குதலை ஹமாஸ் அதிகாரிகள் கண்டித்துள்ளனர்.கீழ்த்தரமான இத்தாக்குதலை தாம் கண்டிப்பதாகவும்,இத்தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவவீரர்களின் குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதாகவும்,ஹமாஸ் அமைப்பின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எகிப்திய இராணுவவீரர்கள் மீதான பயங்கரவாதத் தாக்குதலை அடுத்து,ஸினாய் பிரதேசத்தை பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருமாறு தமது இராணுவத்திற்கு எகிப்திய ஜனாதிபதி முஹம்மது முர்ஸி அழைப்பு விடுத்துள்ளார்.முன்னால் எகிப்திய ஜனாதிபதி ஹூஸ்னி முபாராக்,கடந்த வருட எகிப்திய புரட்சியின் மூலம் ஆட்சிகவிழக்கப்பட்டதன் பின்னரே ரபா எல்லை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments