துபாய் சர்வதேச அல்குர்ஆன் எழுத்தணிக்கலை விழா நடைபெறவுள்ளது.




நான்காவது துபாய் சர்வதேச அல்குர்ஆன் எழுத்தணிக்கலை விழா, ஆகஸட் 13 முதல் 15ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. ஈரான், பலஸ்தீன், ஜோர்த்தான்,ஈராக், சிரியா, எகிப்து, சவூதிஅரேபியா, இங்கிலாந்து மற்றும் ஜேர்மன் அடங்களாக 12 இஸ்லாமிய மற்றும் இஸ்லாமல்லாத நாடுகளிலிருந்து 30க்கும் அதிகமான எழுத்தணிக் கலைஞர்கள் நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.ஒவ்வொருஎழுத்தணிக் கலைஞர்களும்  புனித அல்குர்ஆனின் குறித்தவோர் ஜூஸ் ஒன்றை எழுதுவதற்கான போட்டி,இருநாட்கள் கொண்ட விழாவில் நடைபெறவுள்ளது. போட்டியில்,  ஒவ்வொரு எழுத்தணிக்கலைஞர்களுக்கும் ஒரேமாதிரியான பேனா மற்றும் குறித்தளவு மை என்பன வழங்கப் படவுள்ளன.ஈராக்கின் தாவூத் அல்பரிஜி மற்றும் சிரியாவின் மொஹமட் ஸாலிஹ் உட்பட சர்வதேசரீதியில் பிரசித்திபெற்ற எழுத்தணிக் கலைஞர்கள் போட்டிக்கு மஸ்தியஸ்த்தம் வகிக்கவுள்ளதாக,துபாய் சர்வதேச அல்குர்ஆன் எழுத்தணிக்கலை விழாவின் ஏற்பாட்டுக்குழு தலைவர் ஹ_கும் அல் ஹாஸிமி தெரிவித்துள்ளார்.குர்ஆன் 
அழகியற் கலை மற்றும் எழுதும் முறைகள் பற்றிய கலந்துரையாடல் குழுக்களும் இந்நிகழ்வில் ஏற்பாடு செய்யப்படவுள்ளதுடன்,இதன் மூலம் அல்லாஹ்வின் புனித வேதத்தை நன்கு பரிச்சியப்படுத்திக் கொள்வதற்கும்,அதன் அழகியல் அம்சங்களைஅறிந்துகொள்வதற்குமான வாய்ப்பை விழாவுக்கு வருகைதரும் பார்வையாளர்களுக்கு வழங்குவதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் ஹூகும் அல் ஹாஸிமி மேலும் தெரிவித்துள்ளார்.துபாயின் கலாச்சார அமைச்சு,இளைஞர் மற்றும் சமூக அபிவிருத்திப் பிரிவு என்பன இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளதுடன்,இந்நிகழ்வுகள் துபாயின் Grand Hyatt Hotel இல் நடைபெறவுள்ளன.

Post a Comment

0 Comments