முதல்முதறையாக இஸ்லாமிய விடுமுறைநாட்களுக்கு ஜேர்மனியின் நகரம் அங்கீகாரம்.




ஜேர்மனியில் முதல்முறையாக இஸ்லாமிய விடுமுறைநாட்களுக்கு ஹம்பேர்க் நகரில் உத்தியோகபூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம்  இஸ்லாமியவிடுமுறை தினங்களுக்கு உத்தியோகபூர்வ அங்கீhரம் வழங்கப்பட்ட ஜேர்மனியின் முதலாவது நகராக ஹம்பேர்க் நகர் மாறியுள்ளது.ஜேர்மனியின் வடபகுதியில் அமைந்துள்ள  ஹம்பேர்க் நகர் அதிகாரிகளுக்கும்,உள்நாட்டு முஸ்லிம் குழுக்களுக்கும் இடையிலான உடன்படிக்கையின் அடிப்படையில் பெறப்பட்ட முடிவின் படி இவ் அங்கீகாரம் கிடைக்ப்பெற்றுள்ளது.இதனால் ஹம்பேர்க் நகரில் வசிக்கும் முஸ்லிம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு தமது வீடுகளிலிருந்தவறே விடுமுறைநாட்களை கொண்டாடும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றுள்ளது. இவ்வார இறுதிப்பகுதயில் முஸ்லிம்கள் புனித ரமழான் நோன்புப் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.ஹம்பேர்க் நகரின் மொத்த சனத்தொகையான 2மில்லியனில், 150,000 பேர் முஸ்லிம்களாவார். இதேவேளை கிறிஸ்தவ மற்றும் யூத சமூகங்களின் விடுமுறைநாட்களுக்கு ஏற்கனவே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜேர்மனியின் ஏனைய நகரங்களுக்கும் இவ்வாறான அங்கீகாரம்
வழங்கப்படும் என தாம் எதிர்பார்ப்பதாக ஹம்பேர்க் நகர மேயர் ஒலப் ஸ்குல்ஸ் தெரிவித்துள்ளார்.ஜேர்மனியில் இஸ்லாமிய கலாச்சார ஸ்திரத்தன்மை வளர்ச்சி ,பழமைவாதிகள் மற்றும் தீவிர வலதுசாரிக்கட்சிகளுக்கிடையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Post a Comment

0 Comments