பல இலட்சக்கணக்கான மக்கள் புனித பள்ளிவாசல்களில் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றியுள்ளனர்.




புனித ரமழான் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையில் புனித மக்காவின் மஸ்ஜிதுல்ஹரம்,மதீனாவின் மஸ்ஜிதுல் நபவி ஆகிய பள்ளிவாசல்களில் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.வியழக்கிழமை இரவு,புனித அல்குர்ஆனை ஓதிமுடிக்கும் தராவீஹ் மற்றும் கியாழுல்லைல் தொழுகைகளில் (கத்ம் அல்குர்ஆன் தொழுகை), இரண்டு புனித பள்ளிவாசல்களிலும் பல இலட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டதாக சவூதிஅரேபியாவின் உத்தியோகபூர்வ செய்திஸ்தபானம் தெரிவிக்கின்றது.இரு புனித பள்ளிவாசல்கலும்
 இறை வணக்கஸ்தர்களினால் முற்றாக நிரம்பிக் காணப்பட்டதுடன், பள்ளிவாசல்களுக்கு வெளியே மற்றும் வீதிகளிலும் வணக்கஸ்தர்களினால் நிரம்பியிருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.புனித மக்காவின் மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலில் 20 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெள்ளிக்கிழமை ஜூம்ஆத் தொழுகையில் கலந்துகொண்டதுடன், ஜூம்ஆத் தொழுகை மற்றும் குத்பா நிகழ்வுகளை மஸ்ஜிதுல் ஹரம் பள்ளிவாசலின் இமாம்,செய்க் அப்துல் ரஹ்மான் சுதைஸ் நடத்தியுள்ளார்.வெள்ளிக்கிழமை தினத்தின் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் புனித பள்ளிவாசலை அடைந்த உம்ரா  யாத்திரீகர்கள் முதல் புனித ஹரம் பள்ளிவாசலில் பல நூறாயிரம் உம்ரா யாத்திரீகர்களினால் நிரம்பிக்காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. பள்ளிவாசலில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 20,000 இற்கும் அதிகமான  இராணுவ அதிகாரிகள் கடமையில் ஈடுபட்டுள்ளதுடன், கண்கானிப்பு நடவடிக்கைகளுக்காக பள்ளிவாசல் உட்பகுதியில் 750 கெமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.அதேவேளை மதீனாவின் மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் ஜூம்ஆத் மற்றும் புனித அல்குர்ஆனை ஓதிமுடிக்கும் தொழுகைகளில் பத்து இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.

Post a Comment

0 Comments