ரஷ்யாவில் முதலாவது இஸ்லாமிய தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.



ரஷ்யாவின் முதலாவது பொது இஸ்லாமிய தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.Al-RTV எனும் பெயரைக் கொண்ட இவ்இஸ்லாமிய  தொலைக்காட்சி சேவையானது,கடந்த 
ஞாயிற்றுக் கிழமை புனித ஈதுல் பித்ர் தினத்தன்று தனது சேவைகளை தொடங்கியுள்ளது. புனித இஸ்லாத்தையும்,அதன் ஆன்மீகப் பெறுமதிகளையும் ஊக்குவிக்கும் நோக்கில்,ரஷ்யாவின் மிகப்பெரும் இஸ்லாமிய நிறுவனமொன்றினால் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பஸ்கோர்டோஸ்டான்,டடர்ஸ்தான் மற்றும் ஆறு வட கோவ்காஸூஸ் குடியரசுகள் ஆகிய ரஷ்யாவின் எட்டு பிரதேசங்களில்,Al-RTV இன் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. தெலைக்காட்சி சேவையின் தலைமை ஆசிரியராக,ஈரோ ஏஸியா தெலைக்காட்சி மற்றும் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவரான ருஸ்தம் ஆரிப்ஹட்துனு இருக்கின்றார்.ரஷ்யாவின் மிகப்பெரும் இஸ்லாமிய நிறுவனத்தின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய மக்கள் கவுன்சிலால் தொலைக்காட்சி சேவை கண்கானிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments