லிபியாவின் தலைநகர் திரிப்போலியில் அமைந்திருக்கும் அல்ஸஹாப் அல்தஹாம் பள்ளிவாசல் மற்றும் மக்பரா மீதான தாக்குதலைத் தொடாந்து லிபியாவின் உள்நாட்டு அமைச்சர் பௌஸி அப்தலாலி ஞாயிற்றுக்கிழமையன்று தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்.அல்ஸஹாப் அல்தஹாம் பள்ளிவாசல் மற்றும் மக்பரா,புல்டோஸார் இயந்திரங்களைக் கொண்டு உடைக்கப்படும் போது தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதனை தடுக்கவில்லை என்ற கடுமையான குற்றச்சாட்டு பௌஸி அப்தலாலி மீது
சுமத்தப்பட்டதன் பின்னணியிலே அவரது ராஜினமா இடம்பெற்றுள்ளது. இதுபோன்ற செயற்பாடுகள் இனிமேல் இடம்பெறாது இருப்பதற்கு, பாதுகாப்பு குழு தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என புதிதாக தேர்ந்தேடுக்கப்பட்ட லிபிய பாராளுமன்ற அங்கத்தவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.லிபியாவின் பிரதி பிரமர் உட்பட உயர் அரசஅதிகாரிகள் பள்ளிவாசல் மற்றும் மக்பரா மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மிஸ்ராத்தா மற்றும் திலடன் ஆகிய நகரங்களில் இரண்டு மக்பராக்கள் உடைக்கப்பட்டன.நேரில்பார்த்தவர்கள் மற்றும் சமூக இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ள படங்களின் அடிப்படையில்,ஸலபி அமைப்புக்களின் அங்கத்தவர்கள் பள்ளிவாசல் மற்றும் மக்பரா மீதான தாக்குதலுக்கு பொறுப்பாக இருந்துள்ளனர். பள்ளிவாசல் மற்றும் மக்பரா உடைக்கப்பட்டதன் சந்தேகத்தின் பேரில் 17பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்தவாரம் திரிப்போலி நகரில் இடம்பெற்ற இரட்டை கார்குண்டுத் தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.ஒரு வருடத்திற்கு முன்னர் திரிப்போலி நகரின் வீழ்ச்சிக்குப் பின்னர் நடைபெற்ற முதலாவது குண்டுத்தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments