இஸ்லாமிய உயர்கல்வி வளர்ச்சியில் கொடையின் பங்கு என்ற கருப்பொருளில், இஸ்லாமும் உயர்கல்வியும் தொடர்பான மூன்றாவது சர்வதேச மாநாடு செப்டம்பர்30 முதல் ஒக்டோபர் 2ஆம் திகதி வரை மலேசியாவில் நடைபெறவுள்ளது.உயர்கல்விக்கான சர்வதேச நிறுவனம்,பஹாங் பிரதேச மன்றம் மற்றும் IKIP சர்வதேசக் கல்லூரி என்பன மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.இஸ்லாமிய உயர்கல்வி வளர்ச்சியில் கொடையின் பங்கு என்ற கருப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டில் கடந்தகாலம்,நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்தல் என்ற முறையில் கருத்துக்கள் ஆராயப்படவுள்ளன. இதேவேளை இஸ்லாமும் உயர்கல்வியும் தொடர்பான இரண்டாவது சர்வதேச மாநாட்டில் உயர்கல்வி வளாச்சியில் தனியார் பாடசாலைகளுக்கு முஸ்லிம் சமூகத்தின் கொடையின் பங்கு என்ற கருப்பொருளில் நடைபெற்றுள்ளது. கல்வி நிலையங்களின் உருவாக்கம்,அபிவிருத்தி உட்பட பராம்பரிய இஸ்லாமிய கல்வியின் எல்லா நிலைகளிலுக்கும்,கொடை நிறுவனங்களின் உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கி.பி.970ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பிரசித்திபெற்ற எகிப்தின் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகம்,கொடை உதவிகளைக்கொண்டு உருவாக்கப்ட்ட இஸ்லாமிய உயர்கல்வி நிலையத்துக்கு மிகச்சிறந்த உதாரணமாக விளங்குவதுடன் பிற்காலத்தில் மேற்குலகில் பல தனியார் பல்கலைக்கழகளகங்களின் முன்மாதிரியாக விளங்கியது.உலகின் முதலவாது பட்டாதரிப் பட்டப்படிப்பை வழங்கிய உலகின் முதல் பல்கலைக்கழகமான, மோரோக்கோவின் கெய்ரவான் பல்கலைக்கழகம் கி.பி. 859இல் பாதிமா பஹ்ரியா எனும் பெண்னால் ஆரம்பிக்கப்பட்டதுடன், சிறுகாலத்தில் கொடைஉதவிகளால் நடத்திச்செல்லப்பட்டது. மேலும்,கொடை உதவிகள் நவீன பல்கலைக்கழங்களின் வளர்ச்சிக்கு பங்களித்து வந்துள்ளது.கொடை வழங்களின் அடிப்படையில் முஸ்லிம்களின் உயர்கல்வி வளாச்சியை கட்டியெழுப்புவதற்கான புதிய ஒரு வழிமுறையை உருவாக்குவதே இம்மாநாட்டின் அடிப்படை நோக்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமய,சமூக மற்றும் பொருளாதார இஸ்லாமிய கல்வி நிலையங்களின் வளர்ச்சியில் கொடையின் முக்கியத்துவம் மற்றும் இஸ்லாமிய வரலாற்றில் உயர்கல்வியின் வளாச்சியில் கொடையின் பங்களிப்பு போன்ற வேறுபட்ட பல தலைப்புக்களில் மாநாட்டில் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன.
0 Comments