நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவில் வெளியிடப்பட்டதிரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து உலகின் பல நாடுகளில் ஆர்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும், இஸ்லாத்தையும் கடுமையான முறையில் அவமதிக்கும் வகையில் 'அப்பாவி
முஸ்லிம்கள்' என்ற தலைப்புடன் YouTube சமூக இணையதளத்தில் குறித்த திரைப்படம் வெளியிடப்பட்டது.இத்திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து,செப்டம்பர் 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை லிபியாவின் பென்ங்காதி நகரில் அமைந்திருக்கும்அமெரிக்க தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிலில் லிபயாவுக்கான அமெரிக்கத் தூதுவர் கிறிஸ்தோபர் ஸ்டீபன் உட்பட 3அமெரிக்கத் தூதராக அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.கடந்த வியாழக்கிழமை யெமன் தலைநகர் ஸனாவில் அமெரிக்க தூதரகத்தின் முன்பாக மோற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போதான இராணுவத்தின் துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். எகிப்தின் கெய்ரோ நகரின் அமெரிக்கத்தூதரகம் முன்பாக நூற்றுக் கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன்,இதன்போது ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் உலகின் பல முஸ்லிம்நாடுகளின்,அமெரிக்கத் தூதரகம் முன்னபாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன.டியூனிசியாவில் அமெரிக்கத் தூதரகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலீஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்புகை பிரயோகித்துள்ளனர், இதன்போது இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன், 29பேர் காயமடைந்தனர்.வெள்ளிக்கிழமை தொழுகையின் பின்னர் சூடானின் கார்ட்டூம் நகரில் அமைந்துள்ள அமெரிக்க,ஜேர்மன் மற்றும் பிரிட்டன் தூதரகங்களின் மீது ஆர்ப்பாட்டக் காரர்களினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், இதன் போது நடைபெற்ற மோதல்களில் 3பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மேலும் இந்தேனேசியா,மலேசியா,துருக்கி,கட்டார்,இந்தியா,பலஸ்தீன்,பிரிட்டன்,பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. திட்டமிட்டு வெறுப்பூட்டக்கூடியவாறு உருவாக்கப்பட்ட திரைப்படம் இரத்தத்தை ஓட்டுவதற்கு வழியமைப்பதுடன்,லிபியா மற்றும் மத்தியகிழக்கின் அண்மைய தாக்குதல்களுக்கு இது வழியமைத்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.இதேவேளை முஸ்லிம் நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகங்கள் தாக்கப்படுவதற்கான அபாயங்கள் நிலவிவருகின்றன.இஸ்லாத்தை அவமதிக்கும் குறித்த திரைப்படத்துக்கு எதிராக அமெரிக்க மன்னிப்புக் கோரவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
0 Comments