இஸ்லாத்தையும்,நபிகள் நாயகம்(ஸல்) அவர்களையும் அவதிக்கும் வகையில் அண்மையில் வெளியிடப்பட்ட அமெரிக்கத்திரைப்படத்துக்கு எதிர்ப்புத்தெரிவித்து, பாகிஸ்தான் YouTube இணையதளத்தை தடைசெய்துள்ளது. இஸ்லாத்தை அவமதிக்கும் திரைப்படத்தை பார்க்கமுடியாமல் செய்வதற்கு YouTube இணையதளத்தை தடைசெய்யுமாறு, திங்கட்கிழமையன்று பாகிஸ்தான் பிரதமர் ரஜா பர்வீஸ் அஷ்ரப் தகவல் அமைச்சுக்கு கட்டளைபிறப்பித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. YouTube இணையதளத்திலிருந்து குறித்த படத்தை நீக்குமாறு YouTube இணையத்துக்கு பாகிஸ்தான் அரசு வழங்கிய ஆலோசனையை நிராகரித்ததன் காரணமாகவே பாகிஸ்தானில் YouTube இணையதளத்தை தடைசெய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையொன்று தெரிவிக்கின்றது. இஸ்லாத்தின் புனிதத்தை அவமதிக்கும் திரைப்படத்துக்கு எதிராக,செப்டம்பர் 11ஆம் திகதி முதல் ஆசியாவின் பல நகரங்களில் அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.இத்திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் லாகூர் மற்றும் கராச்சி நகரங்களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது,அமெரிக்க தூதரகத்தை நோக்கிச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மேற்கொண்டனர்.மேலும் இதன்போது நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களில் இருவர் கொல்லப்பட்டனர்.
0 Comments