உலகில் எப்போதும் முன்னணி 25பணக்காரர்களின் பட்டியலில் முதலிடத்தில் 14ஆம் நூற்றாண்டின் ஆபிரிக்க முஸ்லிம் அரசர்.




உலகில் எப்போதும் முன்னணி 25பணக்காரர்களின் திருத்தப்பட்ட பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில் உலகின் எப்போதும் மிகப்பெரும் பணக்காராக14ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆபிரிக்கப்பகுதியை ஆட்சிசெய்த 1ஆம் மன்ஸாமூஸா என்றமுஸ்லிம் அரசர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.கடந்த ஆயிரம் வருடத்தில்,4.317 டிரில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமான மொத்தசொத்தை கொண்டுள்ள முதல் 25பணக்காரர்களின் பெயர்கள் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன. 25பேர்களில் தற்போது மூண்று பேர் மாத்திரமே உயிர்வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர்களில் 9பேர் பெண்களாக காணப்படுவதுடன், 14பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களாவர்.மேற்கு ஆபிரிக்க அரசரான 1ஆம் மன்ஸாமூஸா, வரலாற்றில் மிகப்பெரும் பணக்காராக விளங்குகின்றார். மாலி இராச்சியத்தை (அதாவது இன்றைய மேற்கு ஆபிரிக்காவின் கானா, திம்புக்டு மற்றும் மாலி) ஆட்சிசெய்த அரசரான 1ஆம்மன்ஸாமூஸா , கி.பி.1331ஆம் ஆண்டு இறக்கும்போது அவரிடம் 400பில்லியன் பெறுமதியான சொந்தமான சொத்து இருந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.  கி.பி.1280ஆம் ஆண்டு பிறந்த 1ஆம் மன்ஸாமூஸா, மாலி இராச்சியத்தை ஆட்சிசெய்தார்.அவரின் நாட்டு உற்பத்தியானது, அக்கால உலகின் அரைவாசிக்கு மேற்பட்ட தங்கம் மற்றும் உப்பு நுகர்வில் செல்வாக்கு செலுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் அவர் மிகப்பெரும் செல்வத்தைப் பெற்றதுடன், இச்செல்வத்தினால் மேற்கு ஆபிரிக்காவில் இன்றும் நிலைத்திருக்கக்கூடிய பெரும் பள்ளிவாசல்களை அமைத்தார் என வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.1325ஆம் ஹஜ் பயணத்தை மேற்கொண்ட மூஸா,அக்கால ஸ்பெயன் மற்றும் பல இடங்களுக்கு சென்றார்.ஸ்பெய்னின் கட்டடக்கலைஞர்களை அழைத்துவந்து மேற்குஆபிரிக்க பகுதியில் பள்ளிவாசல்களை கட்;டினார் என வரலாற்றுத்தகவல்கள் தெரிவிகின்றது.திம்க்டுவில் அமைந்துள்ள டின்ஜ்ஜூஜேபர் பெரிய பள்ளிவாசல் இவரால் கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments