இஸ்லாமிய வங்கிமுறைமகள் தொடர்பான 4வது சர்வதேச மாநாடு துபாயில் நடைபெறவுள்ளது.




இஸ்லாமிய வங்கிமுறைகள் தொடர்பான 4வது வருடாந்த சர்வதேச மாநாடு துபாயில்நடைபெறவுள்ளது.இம்மாநாட்டில் இஸ்லாமிய வங்கிமுறைமை சமகாலத்தில் எதிர்நோக்கும்பிரச்சினைகள் பற்றி ஆராயப்படவுள்ளன. இஸ்லாமிய வங்கித்துறையில் தேர்ச்சி பெற்ற பல்வேறுபட்ட நாடுகளைச் சேர்ந்த 250 பிரதிநிதிகள் மாநாட்டுக்கு வருகைதரவுள்ளதுடன், இவர்களில் 40சிறப்புத் தேர்ச்சியாளர்கள் மாநாட்டில் உரை நிகழ்த்தவுள்ளனர். இவ்வருடத்தில் உலகலாவிய ரீதியில் இஸ்லாமிய வங்கித்துறை கொடுக்கல்,வாங்கல்களை 1டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவில் பெருக்குவதற்கான வழிமுறையை முக்கியமாக மாநாட்டின் மூலம் உருவாக்குவதற்கு  எதிர்பார்க்கப்படுகின்றது.இஸ்லாமிய வங்கித்துறையில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களுடன், இஸ்லாமிய வங்கித்துறையுடன் தொடர்புபட்டவர்களுக்கு கலந்துரையாடுவதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இம்மாநாடு அமையவுள்ளது.இரண்டு நாட்கள் கொண்ட இம்மாநாடானது ஒக்டோபர் மாதம் 9ஆம் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது  என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments