இஸ்ரேலின் எப் -16 போர் விமாணம் காஸாவில் சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.




இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் இருந்து இஸ்ரேலிய நகரங்களின் மீது மேற்கொள்ளப்பட் ரொக்கட் தாக்குதல்களைத் தொடர்ந்து,இஸ்ரேல் ஊடாக அபாய ஒலி எழுப்பிய வன்னம் பறந்து சென்ற எப்-16 போர் விமாணம் வெள்ளிக்கிழமையன்று பலஸ்தீனர்களால் சுட்டுவீழ்த்தப்பட்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.இதேவேளை, அல்குத்ஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள குஸ் எட்ஸியோன் எனும் யூதக்குடியிருப்புப் பிரதேசத்தின் மீது ஏவப்பட்ட மூன்று ரொக்கட் தாக்குதல்களினால் அதிகமான இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர். மேலும், டெல்அவிவ் எஸ்கோல், அஸ்டோட், அஸ்கிலோன் மற்றும் பீர்சீவா போன்ற இஸ்ரேலிய நகரங்களின் மீது பலஸ்தீனர்களால் ஏவுகனை மற்றும் ரொக்கட் தாக்குதல்கள் மேற்கொள்ப்பட்டுள்ளன. இஸ்ரேலின் தலைநகர் டெல்அவிவ் மீது இரண்டு நீண்டதூர ஏவகனைகளால் தாக்குதல் மேற்கொள்ப்பட்டுள்ளதுடன், இரண்டாவது ஏவுகனை டெல்அவிவ் இல் அமெரிக்க தூதுவராலயத்திற்கு 200மீற்றர் தொலைவில் வீழந்துள்ளது. 1991ஆம் ஆண்டு வளைகுடா 
யுத்தத்தின் பின்னர்,முதல்தடவையாக டெல்அவிவ் மீது மேற்கொள்ளப்பட்ட எச்சரிக்கை தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

0 Comments