எகிப்தின் உத்தியோகபூர்வ விமாணசேவை நிறுவனமான 'எஜிப்ட் எயார்' விமாணசேவை நிறுவனத்தின் விமாணங்களில் பணியாற்றும் பெண்களுக்கு முதல்தடவையாக ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம்,எகிப்தின் உத்தியோகபூர்வ விமாணசேவை நிறுவன விமாணங்களில் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைகப்பெற்றுள்ளது. விமாணத்தில் பணியாற்றும் பெண்களுக்கு ஹிஜாப் அணிவதற்கான அங்கீகாரம், அவர்களின் விருப்பத்தின்பேரில் வழங்க்ப்ட்டதாகும் என எஜிப்ட் எயார் விமாணசேவைகள் நிறுவனத்தின் பிரதித்தலைவர் அஸீஸ் பேடல் தெரிவித்துள்ளார்.ஹிஜாப் அணிவது விமாணப்பணியாளர்களின் வேலைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.ஹிஜாபுடன்கூடிய புதிய சீருடை அடுத்த மாதமளவில் வழங்கப்படவுள்ளது.இவ்வருட நடுப்பகுதி முதல் பெண்கள் விமாணப்பணியாள்கள் குழுவொன்று ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்குமாறு தொடர்ச்சியாக அழைப்புவிடுத்து வந்தததுடன்,வேலைநிறுத்தப் பேராட்டத்திலும் ஈடுபட்டனர்.இதன்விளைவாக,ஹிஜாப் அணிந்துபணியாற்றுவதற்கான கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.இதேவேளை,கடந்த செப்டம்பர் மாதம் பெண் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு எகிப்தின் தேசிய தொலைக்காட்சிசேவையில் ஹிஜாப் அணிந்து பணியாற்றுவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments