காஸாவின் மீதான இஸ்ரேலின் போர் ஆறாம் நாளாகவும் தொடர்ந்த நிலையில் திங்கட்கிழமை வரை கொல்லப்பட்ட பலஸ்தீனமக்களின் எண்ணிக்கை குறைந்தது 96ஆக அதிகரித்துள்ளது.கடந்த புதன்கிழமை முதல் இதுவரை 1350தடவைகள் காஸாப் பகுதிமீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இரnணுவம் தெரிவித்துள்ளது.
அண்மைய தாக்குதல்கள் காஸாவின் மேற்கு நகரான ரபாவை இலக்குவைத்து நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலிய குண்டுவீச்சு விமாணங்கள்காஸாவின் விளையாட்டு அரங்கு மற்றும் இஞைர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சுக்கட்டத்தின் மீது குண்டுத்தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இஸ்ரேலின் புதிய தாக்குதல்கள்காஸாவின் கிழக்கு மற்றும் மேற்கு பகுதிகளை இலக்கவைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திக்குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, பலஸ்தீனின் ஹமாஸ்இயக்கம் இஸ்ரேலின் எஸ்கோல் பிராந்திய சபையின் மீது மூன்று ரொக்கட்டுக்களையும்,அஸ்கலோன் பிராந்திய சபையின் மீது ஐந்து ரொக்கட்டுக்களையும் ஏவியுள்ளனர்.மேலும், திங்கிட்கிழமையன்று ஹமாஸ் அமைப்பின் இராணுவப்பிரிவான இஸ்ஸத்தீன் கஸ்ஸாம் படையணி இஸ்ரேலினின் ரீஇம் இராணுமுகாத்தை ஏவகணைகளால் தாக்கியுள்ளது.இஸ்ரேலின் பிகீர் சிவா மற்றும் கன் யவ்ன் ஆகிய நகரங்கள் மீதும் ரொக்கட்தக்குதல்கள் மேற்ககொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments