காஸா மீதான இஸ்ரேல் போர் முடிவுக்கு வந்துள்ளது.



பலஸ்தீனின் காஸா பகுதி மீதான இஸ்ரேல் போர் புதன்கிழமை இரவுடன் முடிவுக்கு வந்துள்ளது.பலஸ்தீன ஹமாஸ் இயக்கம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் யுத்த நிறுத்த உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக புதன்கிழமையன்று எகிப்து அறிவத்தது.இதன்
அடிப்படையில் பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே அனைத்துவிதமான தாக்குதல்களையும் முடிவுக்குக் கொண்டுவருதற்கு இருதரப்பும்உடன்பட்டுள்ளது.மேலும் காஸா பகுதிக்குள் பிரவேசிப்பதற்கான அனைத்து எல்லைகளையும் திறப்பதற்கும்,
வெளியிடங்களில் இருந்து காஸா பகுதிக்குள் பொருட்களை கொண்டுசெல்வதற்கும் இஸ்ரேல் இணங்கியுள்ளது.கடந்த நவம்பர் 14ஆம் திகதி முதல், எட்டுநாட்களாக நடைபெற்ற போரில் 160க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதுடன்,1200க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக பலஸ்தீன் போராளிகள் இஸ்ரேல் நகரங்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களில்  குறைந்தது ஒரு இராணுவவீரர் உட்பட 5இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. காஸா மீதான இஸ்ரேல் போரில் பலஸ்தீனின் ஹமாஸ் அமைப்பு,
இஸ்ரேலிய இராணுவத்தை விடவும் பலமாக காணப்பட்டது வெளிப்பட்டுள்ளதாக இஸ்ரேலின் எதிர்கட்சித் தலைவர் சஉல் மோபாஸ் தெரிவித்துள்ளார்.யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை தொடர்ந்து எகிப்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில உரையாற்றிய ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவர் காலித் மிசால், பலஸ்தீன மக்கள் மற்றும்
ஹமாஸ் இயக்கத்தின் கோரிக்கைகளை சரியான முறையில் விளங்கி பொறுப்புடன் செயற்பட்டதாக எகிப்துக்கு தனது நன்றியை தெரிவித்ததுடன்,போரின் போது ஆயுதரீதியாகவும்,நிதிரீதியாகவும் ஈரான் உதவிவழங்கியதற்கும் நன்றி தெரிவித்தார்.

Post a Comment

0 Comments