ரஷ்யாவின் மோஸ்கோ நகரில் புதிய பள்ளிவாசல்கள் கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.




ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோவின் வேறுபட்ட நிர்வாக மாவட்டங்களில் ஆறு இடங்களில் பள்ளிவாசல்கள் அமைப்பதற்கான இடங்களை வழங்குவதற்கு, மோஸ்கோவின் அரசாங்க அதிகாரிகள் தயாராகவுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் மூன்று இடங்கள்,ரஷ்யாவின் ஐரோப்பியப் பகுதிக்கான முஸ்லிம் சபை ஏற்கனவே அறிந்துவைத்துள்ளனர்.தென் புட்டோவோ,லியுப்லினோ மற்றும் சூஸஸ் என்டுதியஸ்டுவ் எனும் பகுதிகளிலேயே இம்மூன்று இடங்களும் அமையப்பெற்றுள்ளன என ரஷ்ய பத்திரிகையொன்று தெரிவிக்கின்றது.ஏனைய இடங்களிலும் பள்ளிவாசல்கள் கட்டுவதற்கான தேவைப்பாடுகள் இருப்பதாக ரஷ்யாவின் ஐரோப்பியப்  பகுதிக்கான முஸ்லிம் சபையின் தலைவர் ரவீல் கைனுதீன் தெரிவித்துள்ளார். இதேவேளை பள்ளிவாசல்கள் கட்டுவதற்கான வேண்டுகோள்கள் இஸ்லாமிய இயக்கங்களினால் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றினை தாங்கள் ஆராய்ந்துவருவதாகவும் மோஸ்கோவின் மேயர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோஸ்கோவில் குறைந்தது 1.5மில்லியன் முஸ்லிம்கள்  வாழ்கின்றனர். இத்தொகையினை பத்து மாவட்டங்களுக்கு சமஅளவுகாளாக பிரிப்பதாகக்கருதினால் ஒவ்வொரு மாவட்டங்களிலும் உள்ள 150,000 முஸ்லிம்களில்,1500பேருக்கும்
அதிகமானவர்களுக்கு குறைந்தது ஒரு பள்ளிவாசல் அவசியப்படுகிறது என ரவீல் கைனுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments