இஸ்ரேலியப் பொருட்களை பலஸ்தீன மக்கள் பகிஷ்கரிப்புச் செய்யவேண்டும் என பலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் ஸலாம் பைய்யாத் ஞாயிற்றுக்கிழமையன்று ரமல்லாவில் செய்தியாளர்களிடம் பேசும் போது தெரிவித்துள்ளார்.பலஸ்தீன அதிகாரசபையின் அரசாங்க வரியை,இஸ்ரேல் தக்கவைத்துக்கொண்டுள்ளதற்கு பதில் வழங்கும் வகையில் இதனை மேற்கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ், ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் பலஸ்தீனுக்கு நிரந்தர உறுப்புரிமை கோரி மேற்கொண்டுவந்த பிரச்சாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலஸ்தீன அதிகாரசபைக்கு ஒரு மாதகாலத்திற்கு கிடைக்கவேண்டிய 100மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தை எதிர்வரும் மார்ச்மாதம் வரையில் தக்கவைத்துக் கொள்ளப்போவதாக இஸ்ரேலின் முன்னால் வெளிநாட்டு அமைச்சர் கடந்த புதன்கிழமையன்று தெரிவித்திருந்தார் .எல்லா வகையான இஸ்ரேலிய தயாரிப்புக்களையும் பகிஷ்கரிக்குமாறு ஸலாம் பைய்யாத் அழைப்புவிடுத்துள்ளார். மிகநீண்ட காலமாக மிகமுக்கியமான இவ் உதவித்தொகை பணத்தை பலஸ்தீன அதிகாரசபை பெற்றுவந்ததது.எனினும்,தற்போது இதனால் உள்நாட்டில் நிதிநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும்,இதனை நிவர்தி செய்யும் வகையில் அரபுலீக் அமைப்பு தமக்கு ஒரு மாதத்திற்கு 100மில்லியனுக்கும் அதிகமான உதவித்தொகையை வழங்குவதாக வழங்கிய உறுதிமொழியை முழுமையாக நடைமுறைப்டுத்துமாறும் பலஸ்தீன அதிகாரசபையின் பிரதமர் அரபுலீக் அமைப்புக்குஅழைப்புவிடுத்துள்ளார். ஐக்கியநாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்தை பலஸ்தீன் பெற்றதையடுத்து ஐனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலமையிலான அரசாங்கம் நிதிநெருக்கடிகளை சந்தித்துவரும்நிலையில், அரபுநாடுகள் பலஸ்தீன அதிகாரசபைக்கு மாதந்தோறும் நிதிரீதியான உதவிகளை வழங்குவதற்கு உடன்பட்டிருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments