அமெரிக்காவின் பொதுமன்றம் அண்மையில் வெளியிட்ட ஆய்வறிக்கையின்படி உலகில் மிகவேகமாக வளர்ந்துவரும் மதமாக இஸ்லாம் விளங்குகின்றது.மேலும் இளைஞர்களிடம் மிகபிரசித்தி பெற்ற மதமாக இஸ்லாம் காணப்படுவதாக இவ்ஆய்வு தெரிவிக்கின்றது. ஆய்வுகள் நடத்தி உண்மையை அறிந்துகொள்வதற்கு இளைஞர்கள்
ஆர்வத்துடன் ஈடுபடுவதன் மூலம் இளைஞர்களிடம் பிரசித்திபெற்ற மதமாக இஸ்லாம் காணப்படுகின்றது.அமெரிக்காவின் வொஷிங்டன் நகரை தளமாகக் கொண்ட அமெரிக்காவின் குறித்த பொதுமன்றமொன்றே மேற்படி ஆய்வை மேற்கொண்டுள்ளது. உலகின் இரண்டாவது மிகப்பெரும் மதமாக இஸ்லாம் காணப்படுகின்றதுடன், உலகம் பூராகவும் தொடர்ச்சியாக இஸ்லாம் வளர்ந்துவருகின்றது. உலகில் தற்போது 1.6பில்லியன்,அதாவது உலகசனத்தொகையில் 23சதவீதத்தினர் முஸ்லிம்களாக வாழ்கின்றதுடன், அவர்களில் 87-90சதவீதத்தினர் சுன்னிமுஸ்லிம்களாகவும், 10-13 சதவீதத்தினர் ஷியாக்களாகவும் காணப்படுவதாக இவ்ஆய்வு மேலும் தெரிவிக்கின்றது
0 Comments