ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் நிரந்தர உறுப்புநாடுகளில் அமெரிக்காவைத் தவிர்ந்த ஏனைய அனைத்து நாடுகளும் கைப்பற்றப்பட்ட பலஸ்தீன பூமியில் புதிய குடியிருப்புக்கள் அமைப்பதற்கு எதிராக சர்வதேச ரீதியிலான தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளது. 'இஸ்ரேல் புதிதாக குடியிருப்புக்களை அமைப்பது பற்றிய அறிவிப்பானது,அந்நாட்டுக்கு எதிர்மறையான செய்தியை கொண்டுசெல்லக்கூடியதுடன், பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படவேண்டிய அதன் நம்பிக்கைக்கு குறைமதிப்பை ஏற்படுத்தும்.' என ஐக்கியநாடுகள் பாதுகாப்புச்சபையின் நிரந்தர இரண்டு ஐரோப்பிய உறுப்புநாடுகளான பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் உடன் ஜேர்மனி மற்றும் போர்த்துகல் என்பன வெளயிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்அறிக்கையானது ஐக்கியநாடுகள் சபைக்கான பிரித்தானியாவின் தூதுவர் மார்க் லையல் கிராண்டினால் ஐக்கியநாடுள் சபையில் வாசிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புக்களை அமைக்கும் செயற்பாடானது சர்வதேச சட்டங்களை மீறும் செயலாக இருப்பதுடன்,இத்திட்டத்தை கண்டிப்பாக இரத்துச்செய்யும் படி இஸ்ரேலிய அரசாங்கத்திடம் தாம் கேட்டுக்கொள்வதாகவும் அக்கூட்டறிக்கை மேலும் தெரிவிக்கின்றது. ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபையின் ஏனைய உறுப்புநாடுகளான ரஷ்யாவும்,சீனாவும் இஸ்ரேலின் இத்திட்டத்திற்கு தமது கண்டத்தை வெளியிட்டுள்ளது.எனினும் அமெரிக்கா, குடியிருப்புக்களை அமைப்பதற்கு இஸ்ரேலுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர உறுப்புநாடுகள் அல்லாதா அஸர்பைஜான், கொலம்பியா, இந்தியா, போர்த்துக்கல், குவத்தமாலா, மோரோக்கோ, பாகிஸ்தான்,தென்ஆபிரிக்கா மற்றும் டூக்கோ ஆகிய நாடுகள் இஸ்ரேலின் இத்திட்டத்தை கண்டித்து தமது சொந்த அறிககைகளை வாசித்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப்பகுதியில் 1000 புதியகுடியிருப்புக்களை அமைப்பதற்கும், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜேரூஸலத்தில் 2612க்கும் அதிகமான புதியகுடியிருப்புக்களை அமைப்பதற்கும் இஸ்ரேல் அண்மையில் அங்கீகாரம் வழங்கியது. புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாடொன்றில் பேசிய ஐக்கியநாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கீ மூன், அபாயமான பாதைக்கு இட்டுச்செல்லும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
0 Comments