உலகில் மிகப்பழமை வாய்ந்த பலஸ்தீனப் பெண்னான மரியம் அம்மாஷ் தனது 124வயதில் காலமாகியுள்ளார்.உஸ்மானிய கிலாபத்தின் கடவுச்சீட்டை வைத்திருந்திருந்த இவர்கள், பலஸ்தீனின் ஹைபா நகரில் வாழந்துவந்தார்.மரியம் அம்மாஷ் 1888ஆம்ஆண்டு,அதாவது பலஸ்தீனை ஆக்கிரமிப்பதற்கு 60வருடங்களுக்கு முன்னர் பிறந்தார்.உஸ்மானிய கிலாபத்தின் போது வழங்கப்பட்ட ஆள்அடையாள அட்டை,கடவுச்சீட்டு என்பனவும் இவரிடம் இருந்தாக உறவினர்கள் தெரிவித்துள்ளார்கள். ஜனாஸா பலஸ்தீனின் உள்ள உமர் பின் கத்தாப் பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவருக்கு பத்துப் பிள்ளைகள். மரியம் அம்மாஷின் பேரப் பிள்ளைகளின் எண்ணிக்கை 350 ஆகும்.
0 Comments