சவூதிஅரேபியா பாராளுமன்றத்தில் 20சதவீமதான ஒதுக்கீடு பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.






சவதிஅரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ்,அந்நாட்டு பாராளுமன்றத்துக்கு (சூராகவுன்ஸிலுக்கு) 30பெண்களை நியமித்துள்ளார். வரலாற்று முக்கியத்துவம்வாயந்த, இவருடைய இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.இதன் அடிப்படையில் சவூதிஅரேபியாவின் சூராகவுன்ஸில்20சதவீதமான ஒதுக்கீடு பெண்களுக்கு கிடைக்ப்பெற்றுள்ளது.சவூதிஅரேபியாவின் கொள்கை மற்றும் சட்டங்களை வகுப்பதற்கு மன்னருக்கு ஆலோசனை வழக்கும் உத்தியோகபூர்வ நிறுவனமாக சூராகவுன்ஸில் விளங்குகின்றது. சூராகவுன்ஸிலின் சாசனத்தில் திருத்தப்பட்ட ஆணையின் படி, 150உறுப்பினர்கள் அங்கம்வகிக்கும் சூராகவுன்ஸிலில் 30உறுப்பினர்கள் பெண்களாக இருக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளது.புதிய சூராகவுன்ஸில் உறுப்பினர்களிடையேஆண்,பெண் கலப்புக்கு அனுமதிக்கப்படவில்லை. மேலும்,அவர்களுக்கு வேறான இடங்கள் ஒதுக்கப்பட்டப்பட்டுள்ளது எனவும் சவூதிஅரேபியாவின் உத்தியோகபூர்வ செய்திஸ்தாபனம் தெரிவித்துள்ளது.


Post a Comment

0 Comments