ஈரான் புதிய ஏவுகணைகளை ஹோர்மூஸ் நீரிணைப்பகுதியில் பரீட்சித்துள்ளது.




ஈரானின் ஹோர்ஸ்மூஸ் நீரிணைப்பகுதியில் நடைபெற்றும் வரும் கடற்படை பயிற்சியின் போதுபுதிய ஏவுகணைகள் பரீட்சிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.உலக மசகுஎண்ணெய் உற்பத்தியில் ஐந்தில் ஒரு பகுதி ஈரானின் ஹோர்மூஸ் நீரிiணைஊடாகவே உலகசந்தைக்குகொண்டு செல்லப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.ஈரானின் புதிய உற்பத்தியான 'ராத்' நீண்டதூர ஏவுகணை வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டதாக இப்பயிற்சியின் பொறுப்பாளரான ரியர் அட்மிரல் அமீர் ரஸேட்கரி தெரிவித்துள்ளார். மேலும், ஈரானின் மற்றுமோர் புதிய உற்பத்தியான 'நஸ்ர்'(வெற்றி) குறுந்தூர ஏவுகணையும் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப்பட்டுள்ளது.நஸ்ர் வகை ஏவுகணைக்கு 3,000 டோன் எடையுடைய விமாணக்கப்பல்களை அழிக்கக்கூடிய வல்லமை காணப்படுவதுடன், அவை நிலத்திலிருந்தும் கப்பல்களிலிருந்தும் ஏவப்படமுடியும் என ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் அஹ்மத் வஹ்தி தெரிவித்துள்ளார்.இப்புதுவகை ஏவுகணைகளுக்கு புதிய தொழிநுட்பங்கள் புகுத்தப்படவுள்ளதுடன், இதன்மூலம் எதிர்காலத்தில் இவ்ஏவுகனைகள் ஹேலிகப்டர் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களிலிருந்தும் ஏவப்படமுடியும் என வஹ்தி மேலும் தெரிவித்துள்ளார்.ஆறு நாள் கொண்ட ஈரானின் கடற்படை பயிற்சிகள், டிசம்பர் 28ஆம் திகதி ஹோர்மூஸ் நீரிணைப்பகுதியில் ஆரம்பமானதுடன் இதன்போது பலவகையான வான்பாதுகாப்பு ஏவுகணைகள், நீர்க்கீழ் மற்றும் எதிரிக்கப்பல் ஏவுகனைகள்  பரீட்சிக்கப்பட்டுள்ளது. தமது கடற்படைப் பயிற்சிகள் தமது அயல்நாடுகளுக்கு  எவ்வித அச்சுறுத்தலாகவும் அமையாது என ஈரான் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments